2025 தொலைநோக்கு பொருளாதார அபிவிருத்திக்கு அப்பால் செல்கின்றது
2017-09-12 11:38:17 | General

2015 இல் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது அதிகளவுக்கு எதிர்பார்ப்பு காணப்பட்டது. பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரிக்குமென உடனடியாகவே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அது நிறைவேற தவறிவிட்டது. வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுப்பதற்கு தவறியமை குறிப்பிடத்தக்க ஏமாற்றங்களில் ஒன்றாகும். அரசாங்கத்தின் நிச்சயமற்ற கொள்கை இதற்கு பங்களிப்பை செலுத்தியிருந்தது.

அத்துடன்  வெளிநாட்டு முதலீடு வருவதற்கு தேவையான சூழலை உருவாக்குவது குறித்து அரசாங்கம் மனதில் கொண்டிராமையும் இந்தத் தோல்விக்குக் காரணமாகும். அரசாங்கம் தொடராக பொதுமக்களின் அதிருப்தி மட்டம் உயர்ந்து செல்கின்றது. தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியமை இதற்கான காரணங்களாகும். பொருளாதாரத்தில் மட்டுமே அரசாங்கம் குறைந்தளவுக்கு செயற்பட்டிருக்கின்றது என்பதல்ல.


தேசிய ஒருமைப்பாடு தொடர்பான அரசாங்கத்தின் இரட்டைத் தன்மை நிலைமாற்று நீதிக்கு மதிப்பளித்தல் தொடர்பான விடயத்தை அரசாங்கம் மனதில் கொண்டிருக்கவில்லை என்பது மட்டுமன்றி ஊழலுக்கு எதிரான  நடவடிக்கை மற்றும் போர்க்கால விவகாரங்கள் அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பவற்றிலும் ஒரே மனதுடன் இருக்கவில்லையென்று அர்த்தப்படுகின்றது.

பொதுமக்கள் பொதுவாக அரசாங்கத்திற்கு வாக்களித்தோர் நாட்டின் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை அரசாங்கம் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஊழலை முடிவுக்குக் கொண்டு வரும் எனவும் கருதினர்.

ஆயினும், அரசாங்கத்தினால் மோசமான முறையில் கைவிடப்பட்ட உணர்வு காணப்படுகின்றது. எவ்வாறாயினும் அதிகளவு  நோக்கத்துடன் கூடிய ஒருமைப்பாட்டுடன் செயற்படுவதற்கு அரசாங்கம் இப்போது அணி திரண்டு வருவதாக தோன்றுகிறது. 


கடந்த காலத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த அரசாங்க அதிகாரியாக இருந்தவருக்கான தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி செயலாளராக விளங்கிய லலித் வீரதுங்க மூன்று வருட கடூழியச் சிறைத் தண்டனையை பெற்றிருக்கின்றார். அத்துடன் 52 மில்லியன் ரூபா அபராதம் மொத்தமாக விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு திருப்பு முனையாக அமைந்திருக்கின்றது.


இதே தண்டனை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்டவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல் நோக்கத்துக்காக அரசாங்கத்தின் நிதியை தவறாக கையாண்டு குற்றமிழைத்ததாக கண்டறியப்பட்டது. இந்தக் குற்றம் தொடர்பான கண்டுபிடிப்பு முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு எதிரானதாக அமைந்தது. 

அத்துடன் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு அதிகார சபையின் தலைவருக்கும் எதிரானதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முழுமையாகவும் பாரியளவிலும் அரசாங்க சொத்தை துஷ்பிரயோகம் செய்ததாக  குற்றம் கண்டறியப்பட்டிருப்பது  ஊழல், மோசடி குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு எச்சரிக்கை 
சமிக்ஞையை அனுப்புவதாக அமையும். தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பாக ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஆயினும் அவர்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்தும் வெளிவருவதற்கான சில வழிமுறைகளையும் கண்டறிந்திருந்தனர். எவ்வாறாயினும் 2015 தேர்தல் பிரசாரத்தின் போதான பிரதான சுலோகம் ஊழலுக்கு எதிரான செயற்பாடாக அமைந்திருந்தது.  ஆயினும், அது தொடர்பான மாற்றம் மெதுவாகவே வந்துகொண்டிருக்கிறது. ஆகவே உண்மையில் மாற்றம் ஒருபோதும் வரப்போவதில்லையென்று பலர் நினைத்திருந்தனர். 


2020 க்கு அப்பால்


செயற்பாட்டை மேற்கொள்வது அர்த்தபுஷ்டியானது. கையாள்வதற்கான முக்கிய விவகாரம் அதாவது ஐ.தே.க. மற்றும் சு.க. ஆகிய தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை அமைப்பதற்கான இரு பிரதான கட்சிகளும் பிரச்சினைகள் தொடர்பாக ஒரே மனதுடன் இருக்க வேண்டியதொன்றாகும். அதாவது தீர்வு காண்பதற்கான தேவை குறித்து ஒரே விதமான நிலைப்பாட்டை இரு கட்சிகளும் கொண்டிருக்க வேண்டியதென்பதாகும். கடந்த மாதம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இடம்பெற்றிருந்தன. 

நோக்கத்திற்கான ஒருமைப்பாடு இறுக்கமாக இடம்பெற்று உருவாகி வருவதாக கடந்த மாத விவகாரம் பரிந்துரைத்திருந்தது. ஒவ்வொரு துறையாக மெதுவாக வருவதாக தென்பட்டது. பொருளாதார துறையானது அரசாங்கத்தின் தலைமைத்துவம், முன்னுரிமை கொடுத்தவற்றில் ஒன்றாகும். நிதியமைச்சையும் ஊடக அமைச்சையும் மங்கள சமரவீரவின் கீழ் ஒன்றாக இணைத்தல்  இந்த முன்னுரிமைக்கான குறிகாட்டியாக தென்படுகிறது. 

சரி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையானது பாரிய வரி சீர்திருத்தத்தை பார்க்கக்கூடியதாக அமைந்தது. வரி கட்டமைப்பை விரிவுபடுத்தியமை, வரி ஏய்ப்பை இல்லாமல் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். இதனை எதிரணியினரும் வரி கட்டமைப்புக்குள் உள்ளடக்கப்படக்கூடியவர்களும் எதிர்த்திருந்தனர். ஆயினும் தலைமைத்துவ மட்டத்தில் இரு கட்சிகளும் இணக்கப்பாட்டை எட்டியிருந்ததன் காரணத்தினால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 


எதிர்காலத்திற்கான அரசாங்கத்தின் பொருளாதார நிகழ்ச்சித் திட்டம் 2025 தொலைநோக்குடன் ஆரம்பமாகியுள்ளது. கடந்த வாரம் இந்நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எட்டு வருட பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை வைபவ ரீதியாக ஆரம்பித்தனர். 2025 தொலைநோக்கு திட்டமானது தொடர்ச்சியான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது. முழுப் பொருளாதாரத்தையும்  மையப்படுத்தியதாக அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான தன்மையை இது காண்பிக்கின்றது.

இலங்கையின் அபிவிருத்தி பயணத்துக்கான திட்டங்களை தயார்படுத்துதல் அடுத்த மூன்று வருடங்களில் அரசாங்கம் விரிவான பொருளாதார மூலோபாயத்தை அமுல்படுத்துவதாக அமையுமென தெரிவிக்கப்படுகிறது. 2025 தொலைநோக்கின் பிரகாரம் ஆள்வீத வருமானத்தை ஆண்டொன்றுக்கு 5000 டொலராக அதிகரிப்பதே இலக்காகும். அத்துடன், 10 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் ஐந்து பில்லியன் டொலராக வருடாந்தம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகரிப்பதும் வருடாந்தம் 20 பில்லியன் டொலராக ஏற்றுமதியை அதிகரிப்பதும் இதன் திட்டமாகும்.

ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது பொருளாதார அபிவிருத்திக்கான திட்டமாகவும் அத்துடன் அரசியல் ரீதியான பரிமாணங்களையும் கொண்டிருந்தன. ஊழல் தொடர்பாக அது முன்னிறுத்தியிருந்ததுடன் குறைபாடுகள் தவறான திருப்பங்கள் என்பனவும் முன்னைய அரசாங்கத்தினால் இத்துறைகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


எவ்வாறாயினும், அரசாங்கத்தின் புதிய பொருளாதார நிகழ்ச்சித் திட்ட அங்குரார்ப்பணத்தின் அதிகளவிலான அரசியல் ரீதியான முக்கியத்துவம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியவர்களின் செய்திகளின் மூலம் குறிப்பிடப்பட்டதாக அமைந்திருக்கிறது. எதிர்காலத்தை ஒன்றுசேர்ந்து 2018 காலவரையறைக்கும் அப்பால் செல்வதாக அது அமைந்திருக்கிறது. அத்துடன் அதன் ஆதரவாளவர்கள் கொண்டிருக்கும் 2020 இலக்குக்கும் அப்பால் செல்வதாகக் கூட காணப்படுகிறது.

அரசாங்கம் சீர்குலைவதை பார்க்க விரும்புவோர் ஐ.தே.க. மற்றும் சு.க. ஒருமைப்பாட்டு உடன்படிக்கையானது வருட இறுதியில் இல்லாமல் போய்விடும் என்பதற்கான அறிகுறியை பார்த்துக் கொண்டிருக்கின்றது. அந்த உடன்படிக்கை புதுப்பிக்கப்படாது என அவர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும் ஜனாதிபதியும் பிரதமரும் பல தடவை தாங்கள் ஒன்று சேர்ந்து பணிபுரிவதாக கூறி வருகின்றனர். அடுத்த சுற்று தேசிய தேர்தல்கள் 2020 இல் இடம்பெறவுள்ளன. ஆனால் 2025 தொலைநோக்கில் இந்த இரு தலைவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர். மேலும் ஐந்து வருடங்கள் ஒன்றாக இருப்பதை அச்சட்டமூலம் பரிந்துரைத்திருக்கிறது. 


எதிரொலியும் முன்மாதிரியும்


2025 தொலைநோக்கு அங்குரார்ப்பண வைபவத்தை  அரசாங்கம் முன்மாதிரியாக வழங்கியிருந்தது. அரசாங்கம் ஏனைய முக்கியமான துறைகளிலுள்ளவர்களையும் அதாவது மிகவும் அதிகளவுக்கு தீர்க்கமானதாக செயற்படக்கூடிய தேவைப்பாட்டைக் கொண்ட பகுதிகளை எதிரொலிப்பதாக அமைய முடியும்.

நிலைமாற்று நீதித் துறையில் அரசாங்கத்தின் முன்னேற்றமும் சர்வதேச சமூகத்திற்கு ஜெனீவாவில் அளித்த உறுதிமொழிகளும் தாமதமாகியுள்ளன. 2015 அக்டோபரிலும் பின்னர் 2017 மார்ச்சிலும் நான்கு முக்கிய நிறுவனங்களை ஸ்தாபிப்பதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. உண்மை ஆணைக்குழு, காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், பதிலளிக்கும் நோக்கத்திற்கான விசேட நீதிமன்றம் என்பன இந்த நான்கு நிறுவனங்களாகும்.

காணாமல் போனோர் அலுவலகத்திற்கான சட்டமூலம் மாத்திரமே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றுவரை இவற்றில் எந்தவொரு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. காணாமல் போனோருக்கான அலுவலகம் மட்டுமன்றி 2025 தொலைநோக்கானது நிலைமாற்று நீதி தொடர்பாகவும் கடந்த காலம் துன்பம் குறித்து மக்களை ஆற்றுப்படுத்துவது தொடர்பாகவும் பாரிய பிரதிமையை  கொண்டிருக்க முடியும். 


காணாமல் போனோர் அலுவலகத்தை ஸ்தாபிப்பது அரசாங்கம் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த நோக்கம் குறித்து தவறாக தெரியப்படுத்தும் பிரச்சினை காணப்படுகிறது.  நிலைமாற்று நீதி நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகும். காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பாக நிலைமாற்று நீதியின் நிலைமை இதில் ஒரு விடயமாக அமைந்திருக்கிறது.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை நிலைமாற்று 
நீதி பொறிமுறை பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. ஒவ்வொன்றிலும் வெவ்வேறுபட்ட தனியான விடயங்களை அவர்கள் சமர்ப்பித்தால் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வோருக்கு இலகுவானதாக இது அமைவதுடன் நிலைமாற்று நீதியானது அவர்களின் மோசமான வழக்கு உரைபெயர்ப்பாக அமைந்துவிடும்.

தற்போது நான்கு நிலைமாற்று நீதி பொறிமுறைகள் விரிவுபடுத்தப்பட்ட உரைபெயர்ப்புடன் பொருத்தப்பட்டுள்ளன.  யுத்தத்தை வென்றெடுத்த பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாக இவை அமைந்திருக்கின்றன.


 இதேபோன்ற பிரச்சினை அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளிலும் உள்ளது. இதுவரை அரசாங்கம் தனது பரந்தளவிலான கட்டமைப்பை சமர்ப்பித்திருக்கவில்லை. அவ்வப்போது சிறியளவிலான விடயங்களை மட்டுமே அரசாங்கம் வழங்கி வருகின்றது. பலதரப்பட்ட பேச்சாளர்கள் மூலம் இவை வெளிப்படுத்தப்படுகின்றன. இதனால் எதிரணியானது  அரசாங்கம் சர்ச்சைக்குரிய விவகாரங்களை கொண்டு செல்லப்போகின்றது என்ற விமர்சனத்துக்கு இலக்காவதற்கு இடமளிக்கின்றது.

பௌத்தத்தின் அந்தஸ்தை குறைப்பது அல்லது சமஷ்டி அரசை உருவாக்குவது போன்ற சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் எதனையோ செய்யப் போகின்றது என்ற பிரதிமையை கொடுப்பதாகவும் இது அமைந்துள்ளது. நிலைமாற்று நீதி மற்றும் அரசியலமைப்பு மாற்றம் என்பனவற்றுக்கான பரந்துபட்ட கட்டமைப்பை அரசாங்கம் முன்னிறுத்துவதற்கான தேவைப்பாடு காணப்படுகிறது. ஜனாதிபதியும் பிரதமரும் கரம் கோர்க்க வேண்டிய தேவைப்பாடும் இருக்கின்றது.

2025 தொலைநோக்கின் போது மக்களுக்கு இதன் அர்த்தம் என்ன என்பது குறித்து அவர்கள் விபரிப்பார்கள். ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து 2025 தொலைநோக்கின் போது அவர்கள் என்ன செய்திருந்தனர் என்பதை விபரிக்க வேண்டும். தேசத் தலைவர்களாக வருவதை இலக்கு வைத்திருக்கும் அரசியல் தலைவர்கள் மக்களின்  தலைவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த மக்கள்  ஆக்கபூர்வமான மாற்றத்திற்கு தயாராக இருப்பார்கள். அத்துடன் புரிந்து கொள்வதற்கும் தயாராகவே விளங்குவார்கள். 


கொழும்பு டெலிகிராப் 

TOTAL VIEWS : 938
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
nwb8v
  PLEASE ENTER CAPTA VALUE.