சிறிய விடயங்களுக்கான கடவுள்மாருக்கான நேரம் இது!; பெரும் நெருக்கடியில் 'நல்லாட்சி' அரசு
2017-08-11 10:09:06 | General

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் சட்ட மா அதிபரின் வழக்கறிஞர் குழுவின் கனிஷ்ட உறுப்பினர் ஒருவரினால் மறைமுகமாக குறிப்பிடப்பட்டிருந்த விடயமொன்றை கடந்த வாரம் ஊடகங்கள் எதிர்வுகூறியிருந்தன. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான பகிரங்க கலந்துரையாடலை நட்சத்திர சாட்சி ஒருவர் பாரிய அரசியல் நாடகமாகத் திருப்பியிருந்தார். 


கொழும்பிலுள்ள அசாதாராணமான செல்வந்த வர்த்தகக் குடும்பமொன்றைச் சேர்ந்த இளம் தொழில் முனைவரான அனிகா விஜேசூரிய 2 வருட காலத்துக்கும் மேலாக  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கூட்டு எதிரணி அல்லது அநுர திசாநாயக்கவின் ஜே.வி.பி. வென்றெடுக்கத் தவறியிருந்த விடயத்தை செய்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அரைநாள் சாட்சியத்தில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் அடி அத்திவாரத்தையே அவர் தகர்த்திருக்கின்றார். உயர்நீதிமன்ற நீதியரசர்களை உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அவர் சாட்சியமளித்திருந்தார்.

அத்துடன் அரசாங்கத்திற்கும் எதிரணிக்குமிடையிலான அரசியல் விவகாரத்தின் விதிமுறைகளையும் அவர் மாற்றியிருக்கின்றார். இவை யாவும் கவனக்குறைவாக தற்செயலாக நடந்ததாக இருந்தாலும் கூட இந்த மாற்றத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார்.


முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் குடும்பத்திற்கும் பாரிய நிதி மோசடிக் குற்றச்சாட்டில் பிரதான செயற்பாட்டாளராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த இளம் வர்த்தகர் அர்ஜுன் அலோசியஸுக்குமிடையிலான கேள்விக்குரிய நிதி விவகாரங்களின் பதிவுகளை விபரமாக அனிகா விஜேசூரியவின் சாட்சியம் வழங்கியிருந்தது. கருணாநாயக்க ஆணைக்குழு முன்னிலையில் நிரபராதி என உரிமை கோரியிருந்தார்.

பென்ற்ஹவுஸ் மாடிக் குடியிருப்பு வாடகைக்கு அமர்த்தப்பட்ட உடன்படிக்கைகள் தொடர்பாக அறிந்திருக்கவில்லையென அவர் தெரிவித்திருந்தார். அந்த விளக்கங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தாதது மட்டுமன்றி ஏமாற்றுத் தனமாகவும் தென்பட்டன. பென்ற்ஹவுஸ் உடன்படிக்கை குறித்து எதனையும் அறிந்திருக்கவில்லையென்ற மறுப்பு அவரின் மனைவி மற்றும் மகள்மாரினால் நிர்வகிக்கப்பட்ட கம்பனிக்கான பொறுப்பு சம்பந்தமாகவும் எதனையும் அறியவில்லையென மறுப்பதாக அமைந்திருந்தது. அவரின் விடயமானது நியாயப்படுத்த முடியாததாக உருவாகியிருந்தது. 


இப்போது நல்லாட்சி அரசாங்கம் பாரதூரமான நெருக்கடியில் தான் இருப்பதை கண்டுகொண்டுள்ளது. 2015 ஜனவரியில் அமைக்கப்பட்ட இந்த அரசாங்கம் அதன் பின்னர் இப்போது பாரிய நெருக்கடியில் இருக்கின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. "ஊழலற்ற நல்லாட்சி' என்ற அதன் சொந்த  வாக்குறுதிக்கு பலியாகியுள்ளது.

ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த பெருந்தலைகளின் விவகாரங்களுக்கான ஊழல் விசாரணைகள்  குறித்து விக்கிரமசிங்க ஏனோ தானோ என்ற போக்கை கொண்டிருந்த நிலையில் இப்போது நீதிக்கான பாடலையே அவர் எதிர்கொண்டுள்ளதாக ஒருவரால் குறிப்பிட முடியும். 


அமைச்சரவையிலிருந்து கருணாநாயக்க இராஜிநாமா செய்யாவிடில் அல்லது பதவி நீக்கப்படாவிடில் ஐ.தே.க. கடும் நெருக்கடிக்குள் தள்ளப்படும். அத்துடன் அதன் பின்னரும் கூட ஐ.தே.க.விற்கான பிரச்சினைகள் முடிவுக்கு வர மாட்டாது. இழந்துவிட்ட தார்மீக தன்மையிலிருந்தும் மீட்சி பெறுவதற்கான முயற்சிகள் நல்லாட்சி உணர்வை மீள ஏற்படுத்துவதற்கு பிரதமர் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது ஐ.தே.க.விற்கோ உதவியாக அமைய மாட்டாது.

அவருக்கும் அவரின் அரசாங்கத்திற்கும் ஆதரவளித்திருந்த ஆட்கள் கூட இப்போது முழுமையாக  பிணை முறி மோசடி தொடர்பான அவரின் ஏமாற்று அரசியலிலிருந்தும் ஆரம்பத்திலிருந்தே  விலத்திக் கொண்டுள்ளனர். பொது மக்கள் முன்னிலையில் நம்பகத் தன்மை தொடர்பான பாரதூரமான நெருக்கடியை உண்மையில் அவர் எதிர்நோக்குகின்றார்.  பிரதமருக்கும் பிரஜைகளுக்கும் இழக்கப்பட்ட நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய கூட்டணி அரசாங்கத்திலுள்ள ஐ.தே.க. தரப்பை முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது.

அந்தநடவடிக்கையானது அவரின் சொந்த நிலைமையைக்கூட நெருக்கடிக்குள் கொண்டு செல்லக்கூடும். ரணில் விக்கிரமசிங்க அவரின் முன்னோடியான ஜே.ஆர். ஜெயவர்தனா போன்று சில சமயம் தனிப்பட்ட ரீதியில் ஊழலுடன் சம்பந்தப்பட்டவர் அல்ல. ஆனால் அவரின் மாமனார் மற்றும் அவருக்கு பின்னர் பதவியில் இருந்தவர்கள் போன்று விக்கிரமசிங்க தவறான வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் அரசியல் ஊழல்கள்  என்பனவற்றுக்கு அனுசரணை வழங்குவதற்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்றார். இவற்றிலிருந்து அரசியல் ரீதியில் அனுகூலத்தைப் பெறவும் புதிய ஜனநாயக வழமையான தன்மையாக அதனை நடத்துவதற்கும் அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கின்றார். 


இதேவேளை சாதாரணமான சூழ்நிலையின் கீழ் மோசமான விதத்தில் பொதுமக்கள் மத்தியிலான நம்பிக்கையை இழக்கும் ஜனநாயக அரசியல்வாதிகள்  அதாவது அவர்களின் சொந்தத் தவறுகளினால் நம்பிக்கையை இழப்போர் எதேச்சாதிகாரமான மாற்றீடுகளைத் தேடுவதை தன்மையாகக் கொண்டுள்ளனர். விக்கிரமசிங்க அந்தத் தெரிவுக்கு செல்லவில்லை. 19 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட முறைமைக்கு நன்றி கூற வேண்டும். 


பயனாளிகள் எவராவது?


இந்த நெருக்கடியில் உடனடியாக அனுகூலம் பெறுபவர் யார்? ஜனாதிபதி சிறிசேனவா? அல்லது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவா? அல்லது ஜே.வி.பி. தலைவர் அநுர குமார திசாநாயக்கவா? அல்லது கோதாபய ராஜபக்ஷவா? கோதாபய ராஜபக்ஷ அதிகளவுக்கு அனுகூலம் பெறுவதற்கான சாத்தியப்பாடு இல்லை. ஐ.தே.க. நெருக்கடியிலிருந்தும் அரசியல் ரீதியான முதலீட்டை தேடிக் கொள்ள கூட்டு எதிரணி முயற்சித்தாலும் இவர்கள் அனுகூலம் பெறுவதற்கு சாத்தியமில்லை.

ராஜபக்ஷ சகோதரர்களும் மகன்மாரும் பாரியளவு ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்திருக்கவில்லை. முன்னாள் முதல் குடும்பத்திற்கு எந்தவொரு அரசியல் ரீதியான நம்பகத் தன்மையையும் மீள கொண்டு வருவதற்கான தன்மை கொண்ட பதிலை அவர்கள் அளித்திருக்கவில்லை. ஜே.வி.பி. நிச்சயமாக இதிலிருந்து அனுகூலத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். ஜே.வி.பி. எம்.பி.க்கள் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கின்றனர்.

குறிப்பாக மத்திய வங்கி பிணை முறி மோசடியை வெளிப்படுத்தும் போராட்டத்தில் அவர்கள் முன்னணியில் திகழ்கின்றனர். புதிய மாற்றமானது கோதாபய ராஜபக்ஷவினால் அவரின் பிரதிமை மேம்படுத்தப்படுவதற்கு எதிர்பாராத ஆரம்பமாக அவருக்கு அமையக்கூடும். இரும்புப் பிடிகொண்ட ஊழல் மோசடியற்றவர் பிரதிமையை அவர் மேம்படுத்துவதற்கான எதிர்பாராத திருப்பமாக அமைய முடியும். அவரின் பொது உறவுகளை மேம்படுத்துவோரினால் ஊடகங்களில் பிரபல்யப்படுத்தும் புதிய அலையை நிச்சயமாக எம்மால் எதிர்பார்க்க முடியும். 


ஆனால் ஐ.தே.க. வின் நெருக்கடியிலிருந்தும் அதிகளவுக்கு அனுகூலத்தைப் பெறக்கூடியவராக இருப்பவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார். பிரதமரைப் போன்றல்லாமல் ஜனாதிபதி சிறிசேன ஊழல் மோசடியற்றவர் என்ற தனது சொந்த பிரதிமைக்கு மோசமானளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கவில்லை. நியாயப்படுத்துவதன் மூலமோ அல்லது  மத்திய வங்கி முன்னாள் ஆளுநரின் தவறான செயற்பாடுகளை மூடி மறைப்பதற்கு முயற்சிப்பதன் ஊடாகவோ தனது பிரதிமைக்கு மாசு கற்பித்திருக்கவில்லை.

ஆனால் ஜனாதிபதி சிறிசேன முற்றிலும் ஊழல் மோசடியற்ற தன்மை கொண்டவர் என்ற தன்மையையும் பெற்றிருக்கவில்லை. சிறியளவு நம்பகத் தன்மையைக் கொண்ட ஆட்கள் அவரைச் சூழ இருக்கின்றனர். அவரின் சகாக்களில் சிலர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரின் தோல்விக்காக செயற்பட்டவர்கள்.

விசாரணைகளைத் தவிர்த்துக் கொள்வதற்காக அல்லது ஊழல் குற்றச்
சாட்டுகளின் விசாரணைகளிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்காக அவருடன் இணைந்து கொண்டவர்கள். அல்லது அரசியல்ரீதியான பதவியினூடாக பொருள் ரீதியான அனுகூலத்திற்காக இணைந்து கொண்டவர்கள். 


இந்த மாதிரியான பின்னணிக்கு எதிராக பிரஜைகளும் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர்களும்  சட்டமா அதிபர் திணைக்களத்தின் வழக்கறிஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பாக உடனடி ஆர்வத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த வழக்கறிஞர்கள் தொழில்சார் நிபுணர்களாக இருக்கின்றனர்.

ஆயினும் அவர்களின் சாதாரண ஊழல் விசாரணைகள் தொடர்பான திறமை குறித்து அறியப்பட்டிராதவர்கள். பல வருடங்களாக இத்தகைய விசாரணை குறித்து அறியப்படாதவர்களாக அவர்கள் இருக்கின்றனர். இப்போது சடுதியாக தொழில்சார் நிபுணத்துவ புகழையும் பற்றுறுதியின் புதிய உணர்வையும் அவர்கள் கண்டு கொண்டுள்ளனர். குறிப்பாக நல்லாட்சி நிகழ்ச்சி நிரலின் வழிமுறை இதற்கு பங்களிப்பை வழங்கியிருந்தது.

ஆயினும் அந்த மாற்றம் தொடர்பாக இன்னமும் தெளிவாக தெரியவரவில்லை. எவ்வாறாயினும் விசாரணை முகவரமைப்புகள் மற்றும் பொது அரசாங்க விசாரணையாளர்கள் சலிப்படைந்து அல்லது அச்சுறுத்தப்பட்டவர்களாக முன்னர் உருவாகியிருந்த நிலையில்  பிரஜைகள்  ஜனாதிபதி சிறிசேன ஊடாக 5000 க்கும் அதிகமான அர்ஜுன் அலோசியஸின் குறுஞ்செய்திகள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென அவர்களைக் கேட்பது அவசியமாகும்.

அவற்றை சட்டமா அதிபர் திணைக்களம் ஆணைக்குழு முன்னிலையில் சமர்ப்பித்திருந்தது. அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்ட அரசியல் மற்றும் நிர்வாக துறை சார்ந்தவர்களின் பெயர்கள் பலவற்றில் ரவி கருணாநாயக்கவின் பெயரும் ஒன்றென தென்படுகிறது. யாவற்றுக்கும் மேலாக அலோசியஸின் தொலைபேசி செய்திகள் 2015 ஜனவரிக்கு முன்னரான தினங்களை கொண்ட வரலாற்றின் விபரங்களையும் கொண்டிருக்கக்கூடும். அவரின் மத்திய வங்கி பிணை முறி வர்த்தகத்தைக் கொண்டதாகவும் இருக்கக்கூடும். 


பிரஜைகள்


இத்தகைய வலியுறுத்தலை பிரஜைகளும் ஊடகங்களும் சிவில் சமூகக் குழுக்களும் விடுப்பதன் மூலம் அலோசியஸின் செய்திகளை முழுமையாக வெளிப்படுத்துவதென்பது கட்சி சார்பு அரசியலினால் வழிநடத்தப்படக் கூடாது. அத்துடன் சகல அரசியல்வாதிகளும் ஊழல் நிறைந்தவர்கள் என நிரூபிப்பதை இலக்காகக் கொண்டதாகவும் இது அமையக்கூடாது.

இது பற்றி எமது அரசியல்வாதிகள் ஏற்கனவே அறிந்துள்ளனர்.  விபரங்கள், ஆதாரம், உறுதியான தகவல் தொடர்புகள் எவ்வாறு ஏற்பட்டிருந்தன என்ற விடயம் அல்லது தார்மீகத் பண்பற்ற கூட்டணி, அரசியல் பணிகளுக்கும் வர்த்தகத்துக்குமிடையிலான  கூட்டணியானது ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் பாதுகாப்பு மற்றும் இதனால் நல்லாட்சிக்கான பாதிப்பு மற்றும் பொதுமக்கள் நலன்கள் என்பன பற்றிய விபரங்களையே அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அனிகா விஜேசூரியவின் சாட்சியத்தைப் பார்க்க வேண்டும். ஆணைக்குழுவின் சில விபரங்களை அதாவது வர்த்தகர்களும் அரசியல்வாதிகளும் எவ்வாறு பரஸ்பரம் அனுகூலமான விடயங்களை உருவாக்கி செயற்படுத்துகின்றனர். அதாவது பொது  பணத்தை சம்பந்தப்படுத்தி அவர்கள் செயற்படுத்துகின்றனர் என்பது பற்றிய விபரங்களை அவர் வழங்கியிருக்கின்றார். அத்துடன் பாரிய தொகையான தனியார் நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பது பற்றிய விபரத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.


இந்த வர்த்தகர்களும் அரசியல்வாதிகளும் நெருக்கமான குடும்ப நண்பர்களாக இருக்கின்றனர். தமக்கிடையில் தமது  மனைவிமார் அல்லது கணவன்மார், காதலர்கள் பிள்ளைகள் என்பவர்களினூடாக பாடசாலைப் பிணைப்பை அவர்கள் கொண்டிருக்கின்றனர். ரவி கருணாநாயக்கவின் விவகாரத்தில் கூட்டணியானது றோயல் கல்லூரியின் பழைய மாணவர் மற்றும் கொழும்பு இன்டர்நெஷனல் பாடசாலையின் பழைய மாணவர் என்பவற்றுக்கிடையிலாக காணப்படுகின்றது. இலங்கையிலுள்ள மிக உயர்வான இரு பாடசாலைகள் இவையாகும். இவை சிங்கள அல்லது தமிழ் பேசும் முதலாளிமார்  ரகம் போன்றதல்ல.

நம்ப முடியாத அளவிற்கு செல்வத்தையும் சிறப்புரிமையையும் கொண்ட சிறிய வட்டத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக அவர்கள் உள்ளனர். இந்த ஆண்கள் யாவரும் விலை உயர்ந்த ஆடைகளை அணிகின்றனர். மிகவும் விலை கூடிய கார்களில் செல்கின்றனர். அத்துடன் அவர்கள் பொதுமக்களின் செல்வத்தை சுதந்திரமான முறையில் கொள்ளையடிக்கின்றனர்.

இது அவர்களின் உரிமையாக அல்லது அவர்களின் சிறப்புரிமையாக இருந்தால் அவர்கள் பொதுமக்களின் செல்வத்தை கொள்ளையடிக்கின்றனர். அவர்கள் திறந்த பொருளாதாரம் மற்றும் உலகமயமாக்கலின் பிள்ளைகளாக உள்ளனர்.  பணம் மற்றும் பொருட் செல்வத்தை திரட்டுவதற்கான பேராசையுடனான வர்த்தகர்கள் மற்றும் அரசியல் வாதிகள் என்ற புதிய வர்க்கத்தை அவர்கள்  பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

அவர்களில் சிலர் அரச நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், ஊடகம் மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை ராஜபக்ஷ ஆட்சியின் போது கைப்பற்றுவதற்கு ஆரம்பித்திருந்தனர். சொந்தமாக ஊடக இல்லங்களை கொண்டிருப்பதுடன் பொதுமக்களின் அபிப்பிராயத்தை தமது கட்டுப்பாட்டில்  வடிவமைக்கவும் அவர்கள் முயற்சிக்கின்றனர். மத்திய வங்கியுடன் தனது வர்த்தகத்திலிருந்தும் பாரியளவு இலாபத்தை தவறான விதத்தில் உருவாக்கியிருப்பதாக அர்ஜுன் அலோசியஸ் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருப்பது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. அவர்கள் சொந்த ஊடக இல்லத்தை ஆரம்பிக்க விரும்பியிருந்தார்.

ஏனையவர்களுக்கு ஊக்கமளிக்கும் உதாரணமாக அவர் நோக்கப்படுகின்றார். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இதே விதமான நடவடிக்கைகளும் கட்டமைப்புகளும்  பழைய பெயர்களை அகற்றிவிட்டு புதிய சில பெயர்களுடன் தொடர்வதாக தென்படுகின்றது. 


ஏனையவர்கள்?


நிதி அமைச்சுக்குப் பொறுப்பான பெரிய அமைச்சர் ஒருவர் வீடொன்றை தேடும் போது வர்த்தகர் ஒருவர் தானாகவே வந்து வாடகையற்ற இலவச குடியிருப்பொன்றை அன்பளிப்பாக வழங்க முன்வருகின்றார். வர்த்தகரின் இந்த தாராளத்தை அமைச்சர் ஏற்றுக் கொள்கிறார். நலன்களின் முரண்பட்ட தன்மை பற்றிய சிந்தனை இல்லாமல் அல்லது அதிகாரத்தில் இல்லாத போது அவரே மேம்படுத்தியிருந்த ஆட்சிக் கோட்பாடுகள் பற்றிய எண்ணப்பாடு இல்லாமல் அவர் இவற்றை ஏற்றுக் கொள்கின்றார்.

இந்த விடயம்  பார்வைக்குத் தென்படாமல் மறைந்திருக்கும் பாரியதொன்று பற்றிய "துப்பு'  கிடைத்திருப்பதாக தென்படுகிறது.  ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெல்லா கருணாநாயக்க முற்றிலும் சரியாக இருப்பதாக தென்படுகிறது. பலர் இதனை செய்து கொண்டிருக்கும் போது ஏன்  எனது தந்தையை மட்டும் இலக்கு வைக்கின்றார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். 


இப்போதைய தருணம் பிரஜைகளுக்கும் ஊடகத்துக்கும் சிவில் சமூகக் குழுக்களுக்கும் உரியதாக இருக்கின்றது. முன்னைய பிணை முறி மோசடிகள் தொடர்பாகவும்  ஜனாதிபதி ஆணைக்குழுக்களினூடாகவும் இந்த விசாரணைகளை தொடருமாறு ஜனாதிபதி சிறிசேனவை வலியுறுத்துவதற்கான தருணமாக இது காணப்படுகிறது. கிரேக்க பிணை முறி விவகாரம் இப்போது மறக்கப்பட்டதாக இருக்கின்றது.

அந்நாட்களில் நாட்டுக்கு பல பில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியிருந்ததாக ஐ.தே.க. தலைவர்கள் எமக்கு கூறியிருந்தார்கள். பிணை முறி வர்த்தகம் தொடர்பாக அதிகளவு பணத்தை சம்பாதித்த பல அலோசியஸ்கள் கொழும்பில் இருக்கக்கூடும். அத்துடன் இந்த உடன்படிக்கைகள் ஊடாக பாரியளவு செல்வத்தை தவறான விதத்தில் பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளும் இருக்கக்கூடும். கருணாநாயக்க, அலோசியஸ், மகேந்திரன் போன்று தனிப்பட்ட சிலரை மட்டும் இலக்கு வைப்பது போதுமானதல்ல.

முழு முறைமையையுமே தூய்மைப்படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. அதுவே நல்லாட்சி அரசின் உறுதிமொழியாக இருக்கிறது. அதனையே ஜனாதிபதி சிறிசேனவிடமிருந்து பிரஜைகள் எதிர்பார்க்கின்றனர். அவர் தேசத்தின் தலைவராக இருப்பதை நிரூபிக்கக் கூடியதாக அது மட்டுமே அமையும்.ராஜபக்ஷக்கள் விக்கிரமசிங்காக்கள் என்பவர்களிமிருந்தும் தகைமை அடிப்படையில் வேறுபட்ட தேசத் தலைவராக விளங்குவதற்கும் அவர்கள் இருவருக்குமிடையில் அதிகளவு வேறுபாட்டை கொண்டவராக இருக்கின்றார் என்பதை நிரூபிப்பதற்கும் இது மட்டுமே வழிமுறையாக அமையும்.


அதேவேளை இலங்கைப் பிரஜைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நன்றி செலுத்த வேண்டும். அரசியலுக்கும் வர்த்தகத்துக்குமிடையிலான புனிதத் தன்மையற்ற கூட்டணியை வெளிப்படுத்துவதற்கு உறுதியான விபரங்களை வழங்கியதற்காக ஆணைக்குழுவிற்கு நன்றி கூற வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியாத விபரங்களாக இவை உள்ளன.

முன்னைய ஆட்சியின் சக்தி வாய்ந்த தனிப்பட்டவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகளவுக்கு பிரபல்யப்படுத்தப்பட்டிருந்தன. அவை பற்றி அரசாங்க விசாரணை முகவரமைப்புகளினால் கூட இத்தகைய விபரங்கள் கண்டறியப்பட்டிருக்கவில்லை. இப்போது பிரஜைகளாகிய நாம் அரசியலும் வர்த்தகமும் எவ்வாறு நம் மீது மேலாதிக்கம் செலுத்த இடமளிக்கின்றோம் என்பது பற்றிய சில உறுதியான விபரத்தைக் கொண்டிருக்கின்றோம்.

அத்துடன் அவை எவ்வாறு ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி உள்ளன என்பதையும் தனிப்பட்ட அரசியல்வாதிகள் அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கை வகுப்பு நடவடிக்கைகளில் கூட வர்த்தகர்கள் எவ்வாறு கைப்பற்றுகின்றார்கள் என்பது பற்றி சில உறுதியான தகவல்களை விபரத்தை பொதுமக்களாகிய நாங்கள் கொண்டிருக்கின்றோம். 


சிறிய விடயங்களுக்கான கடவுள்களுக்கான நேரமாக இது அமைந்திருக்கின்றது. அரசியலுக்கும் வர்த்தகத்துக்குமிடையிலான இந்த அழுக்கு தொடர்பில் எமது ஜனநாயகம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பது பற்றிய சிறப்பான எண்ணப்பாட்டை இப்போது நாங்கள் சிறிதளவாவது கொண்டிருக்கின்றோம். அத்துடன் இலங்கைப் பிரஜைகள் இப்போது தமது அரசியல் விசுவாசம் தேர்தல் உபாயங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து மீள சிந்திப்பதற்கு ஆரம்பிக்க முடியும். 


கொழும்பு டெலிகிராப் 

TOTAL VIEWS : 1047
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
jpyi1
  PLEASE ENTER CAPTA VALUE.