மக்கள் வங்கிக்கு இரண்டு முக்கிய விருதுகள்
2018-01-03 11:46:26 | General

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள்  2017 நிகழ்ச்சியில், மக்கள் வங்கி இரண்டு முக்கிய விருதுகளை வென்றெடுத்துள்ளது. வங்கித் துறையின் வெற்றியாளராகத் தெரிவானதோடு, சூழல் பாதுகாப்புக்கான சிறப்பு விருதையும் அது பெற்றுக்கொண்டது.

இந்த விருதுகளின் மூலம், இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் (NCCSL)  இலங்கையின் மிகச்சிறந்த பெறுபேறுகளை அடைந்துகொண்ட வர்த்தகத் துறைகளைக் கௌரவிப்பதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பை வழங்கிவருகிறது.

மிகச்சிறந்த தலைமைத்துவம், குழு ஆளுமை, வளர்ச்சி, செயற்பாடுகள், முகாமைத்துவம், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை நடவடிக்கைகள், குழும சமூகப் பொறுப்பு, வர்த்தக மற்றும் நிதிப் பெறுபேறுகள் ஆகியன வெற்றியாளர்களைத் தீர்மானப்பதில் பிரதான அம்சங்களாக அமைந்திருந்தன.

சமூகப் பொறுப்புத் தேவைப்பாட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் வங்கி, அனைத்துப் பிரிவினரையும் நிதித்துறைக்குள் ஒன்று சேர்த்து புதிய தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி, 2020 ஆம் ஆண்டில் இலங்கையின் அதி
கூடிய டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட வங்கியாக திகழ எதிர்பார்க்கிறது.

மிகப்புதிய வெற்றி பற்றிக் கருத்துத் தெரிவித்த மக்கள் வங்கியின் தலைவர்  ஹேமசிரி பெர்னாண்டோ, "வங்கித்துறையில் வெற்றியாளராகத் தெரிவானது எமக்கு மிகப்பெரிய கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளது“ என்று கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில்; வங்கித்துறையைச் சேர்ந்த ஏனைய தரப்பினருடன் கடுமையான போட்டியை எதிர்கொண்ட பின்னரே இது எமக்குக் கிடைத்துள்ளது.

இந்த விருதுகளின் மூலம், மக்கள் வங்கியின் புதிய படைப்புகளின் சிறப்பு நன்கு வெளிக்கொணரப்படுகிறது. டிஜிட்டல் மயப்படுத்தலின் நன்மைகளை இலங்கை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கு எமது பிரதான தேவையாக இருக்கிறது.

அதேவேளை, சூழல் பாதுகாப்பையும் அதிகபட்சமாகக் கடைப்பிடிப்பது எமக்கு ஒரு முக்கிய நோக்கமாக இருந்தது. இவற்றைக் கருத்திற்கொண்டே, தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் 2017 இல் எமக்கு சூழல் பாதுகாப்புக்கான விருதும் கிடைத்திருக்கிறது. வங்கியின் சூழல் பாதுகாப்புத் திட்டமானது பசுமையான ஒரு எதிர்காலத்தை நோக்கியஎமது பாதைக்கு வழிகாட்டுகிறது' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி  பொது முகாமையாளர் என்.வசந்தகுமார் இங்கு பேசுகையில்; "அண்மையில் இடம்பெற்ற தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் 2017 நிகழ்ச்சியின் போது இந்த இரண்டு முக்கிய விருதுகளையும் மக்கள் வங்கியினால் பெற்றுக்கொள்ளக் கிடைத்தமை ஒரு மிகப்பெரிய சாதனையாகும்' என்றார்.

எமது டிஜிட்டல் மயப்படுத்தல் தொலைநோக்குடன் வங்கியின் விண்ணப்பங்கள், வாடிக்கையாளர் தொடர்பு நிலையங்கள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் செயற்பாட்டு வழிமுறைகள் அனைத்தும் வங்கியை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்கின்றன.

நாம் அடைந்துள்ள இந்த வளர்ச்சியை, சிறப்பாக அடையாளம் கண்டு கொண்டமைக்காக நடுவர்கள் குழுவுக்கு நாம் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

TOTAL VIEWS : 278
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
8qyoh
  PLEASE ENTER CAPTA VALUE.