டயலொக் நிறுவனத்துக்கு SLIM நீல்சன் மக்கள் விருது
2017-03-28 10:15:30 | General

மீண்டும் ஒரு தடவை இலங்கை வாடிக்கையாளர்களினால் வருடத்திற்கான சிறந்த தொலைபேசி சேவை வழங்குனராகவும் இணையத்தள சேவை வழங்குனராகவும் டயலொக் தெரிவு செய்யப்பட்டு 2017 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க SLIM நீல்சன் மக்கள் விருதினை வென்றுள்ளது.


இம்மக்கள் விருதானது இலங்கை வாடிக்கையாளர்களின் கருத்துகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதுடன், டயலொக் ஆனது அனைவரினாலும் விரும்பப்படும் தொலைத்தொடர்பு  சேவை வழங்குனராக கடந்த 6 வருடங்களாக சாதனை புரிந்துள்ளது. மற்றும் டயலொக் சிறந்த இணையத்தள சேவை வழங்குநராக தொடர்ந்தும் 5 வருடங்களாக வெற்றி  கண்டுள்ளதுடன், அதன் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான இணைப்பு வசதிகள் மூலம் உலக தர தொழில்நுட்பத்திலான சேவைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இது தொடர்பாக டயலொக்  நிறுவனத்தின் குழு பிரதம நிறைவேற்றதிகாரியான வீரசிங்க தெரிவிக்கையில்;


"டயலொக் இனங்காணப்பட்டமை  தொடர்பாக நாம் மிகவும் பெருமையடைவதுடன் ஆரம்பத்திலிருந்தே டயலொக் சிறந்த பயணத்தை பின்பற்றுவதனுடன் அதனாலேயே அது வாடிக்கையாளர்களை சென்றடைந்துள்ளது. மற்றும் ஒவ்வொரு தொடர்பாடலுக்கும் டயலொக் நிலையம் அவசியமாகும்' என்றார்.


இவ்வருடம் 11 ஆவது ஆண்டாக மக்கள் விருது நிகழ்ச்சியானது நீல்சனுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தினால் நடத்தப்பட்டது.

இவ்விருதுக்கான வேட்பாளர்கள் மற்றும் வெற்றியாளர்கள் பல்வேறு பிரிவுகளில் 6 மாத காலத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதுடன், 9 மாகாணங்களிலுமுள்ள 15 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயது பிரிவினர்களை அடிப்படையாகக் கொண்டு மேற்படி  ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இம்மக்கள் விருதானது இலங்கை மக்களின் தரம் மற்றும் தனித்தன்மை வாய்ந்த பிரமுகர்களை அடையாளப்படுத்துவதாய் உள்ளது.

TOTAL VIEWS : 893
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
hnck2
  PLEASE ENTER CAPTA VALUE.