OPPO தனது வர்த்தக நாம தொனிப்பொருளை 'The Selfie Expert and Leader' ஆக மாற்றம்
2017-11-10 16:25:30 | General

Selfie Expert  மற்றும்  Leaderஆன OPPO மொபைல்ஸ், தனது OPPO F5ஐ இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த அறிமுக நிகழ்வில், தனது புதிய வர்த்தக நாமத் தொனிப் பொருளான The Selfie  Expert and Leader என்பதையும் அறிவித்திருந்தது. 

28 சர்வதேச சந்தைகளில் பிரசன்னத்தைக் கொண்டுள்ள OPPO தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உலகளாவிய ரீதியில் 200 மில்லியனுக்கும் அதிகமான பரந்தளவு இளம் நுகர்வோர்களால் பயன்படுத்தப்படுகிறது.

இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட வர்த்தக நாமத்தின் முதலாவது FHD + Full Screen மாதிரியாக  F5  அமைந்துள்ளது. இதில் A.I. Beauty Technology உள்ளடங்கியுள்ளது.

Selfie படமொன்றில் அழகியல் தன்மையை மேம்படுத்திக் கொள்ளக் கூடிய  ஒரு தொழில் நுட்பமாக இது அமைந்துள்ளது. A.I. Beauty Technology,Selfie புகைப்படக் கலையை புதிய நிலைக்கு உயர்த்தும் வகையில் அமைந்திருக்கும். 


ரூபா. 47,990 எனும் விலையில் அமைந்துள்ள F5 நவம்பர் மாதம்  11 ஆம் திகதி முதல் நாட்டில் விற்பனைக்கு  அறிமுகம் செய்யப்படும். இந் நிகழ்வில் மேலும் இரு தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. 

இதில், F5, 6GB மற்றும் F5 Youth ஆகியன OPPO ரசிகர்களுக்கும் இளைஞர்களுக்கும் தமது தெரிவுகளுக்கு பொருத்தமானதை தெரிவுசெய்து கொள்ள வாய்ப்பை வழங்குகின்றன. இந்த இரு தெரிவுகளும் டிசம்பர் மாதம் முதல் சந்தையில் அறிமுகம் செய்யப்படும். 


இளம் நட்சத்திரமான சித்தார்த் மல்ஹோத்ரா (Sidharth Malhotra) OPPOவின் புதிய வர்த்தக நாம தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, காணப்படும் வர்த்தக நாமத் தூதுவரான தீபிகா படுகோன் (Deepika Padukone) உடன் இவர் இணைந்துகொண்டுள்ளார்.

புதிய வர்த்தக நாம தொனிப் பொருளான The Selfie  Expert and Leader என்பதன் மூலமாக,  OPPOவின் நோக்கமான சிறந்த Selfie அனுபவத்தை  இளம் நுகர்வோர்களுக்கு பெற்றுக் கொடுப்பது மற்றும் பிரிவில் முன்னிலை வகிப்பது என்பது பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

துறையில் தொடர்ச்சியான தலைவராகவும் நிபுணராகவும் OPPO திகழ்கிறது. 2012இல் முதலாவது Built  in Beautify மென்பொருளை அறிமுகம் செய்திருந்தது.

அத்துடன், 2013 இல் 206 பாகை சுழலும் கமரா தொலைபேசியை ( N1) அறிமுகம் செய்திருந்தது. 120 பாகை பரந்த குழு கமரா செயற்பாட்டை Group Selfiesகளுக்கு அறிமுகம் (F3) செய்திருந்தது. தற்போது OPPO F5 அறிமுகத்துடன், இலங்கை சந்தையில் அதன் தலைமைத்துவ நிலை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இந்த மாற்றத்தினூடாக இளைஞர்கள் மத்தியில் வர்த்தக நாமம் எய்தியுள்ள வரவேற்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. Selfie தொலைபேசிகளை பொறுத்தமட்டில் இது இளைஞர்களின் 1 இல் தர தெரிவாக அமைந்துள்ளது.

200 இலட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் OPPO தொலைபேசியை உலகளாவிய ரீதியில் பயன்படுத்துகின்றனர். வர்த்தக நாமத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நாம செயற்பாடுகள் போன்றன இளைஞர்களை மையப்படுத்தி அமைந்துள்ளதுடன், இளைஞர்கள் மத்தியில் புகழ்பெற்றுத் திகழும் விளையாட்டு, நவநாகரிக மற்றும் களியாட்டம் ஆகிய நாளிகைகள் ஊடாக இலக்கு வைக்கப்படுகின்றன.

OPPO  இலங்கை சந்தையில் ஆழமாக ஊடுருவியுள்ளது. வர்த்தக நாமத்தில் உள்நாட்டு ஊழியர்கள் பணியாற்றுவதுடன், இலங்கையின் பாவனையாளர்களுக்கு பொருத்தமான தயாரிப்புகளையும் வழங்கி வருகிறது. இலங்கையின் இளைஞர்களுக்கு மிகவும் சிறந்த Selfie அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

படப்பிடிப்பு:எஸ்.ரி.ரமேஷ்

 

TOTAL VIEWS : 185
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
qh5la
  PLEASE ENTER CAPTA VALUE.