உலகின் மிகப் பெரிய வங்கிக் குழு வருகிறது
2017-03-28 10:06:32 | General

உலகின் மிகப்பெரிய சர்வதேச பொது வங்கியான ஐரோப்பிய முதலீ ட்டு வங்கியின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்த வாரம் இலங்கை வரவுள்ளது. 


தெற்காசிய பிராந்தியத்துக்கான பயணமொன்றின் ஆரம்பமாகவே ஐரோப்பிய முதலீட்டு வங்கியினது தூதுக்குழுவின் இந்த இலங்கை விஜயம் அமையவுள்ளது.

அந்த வகையில், தெற்காசியாவுக்கு பொறுப்பான புதிதாக நியமிக்கப்பட்ட ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உப தலைவரான அன்ரூவ் மெக்டோவெல் இலங்கையிலான அண்மைய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால முதலீடுகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களுடனும் அதேபோல், வர்த்தகத் தலைவர்கள், இராஜதந்திர சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் உள்நாட்டு, சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகியோருடனும் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக ஐரோப்பிய முதலீட்டு வங்கியினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து ஐரோப்பிய முதலீட்டு வங்கியினது நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்பு கழிவுநீர் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிர்மாணப் பணிகளையும் உப தலைவர் மெக்டோவெல் மேற்பார்வை செய்யவுள்ளார்.


ஐரோப்பிய முதலீட்டு வங்கியானது ஐரோப்பாவின் நீண்டகால அடிப்படையில் கடன் வழங்கும் நிறுவனமாக காணப்படுவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளுக்கு நேரடியாக சொந்தமான நிறுவனமாகவும் உள்ளது.

ஐரோப்பிய முதலீட்டு வங்கி 2002 ஆம் ஆண்டில் இருந்து இலங்கைக்கு முதலீட்டு உதவிகளை வழங்கி வருகிறது. காலநிலை சம்பந்தப்பட்ட முதலீடுகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சுனாமியின் பின்னரான மீட்சி என்பன இதில் உள்ளடங்கும்.


இதேநேரம், புதிய முதலீடுகள் கொழும்பில் சுத்தமான நீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவற்றை எப்படி மேம்படுத்துகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்கும் முகமாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி தூதுக்குழுவினர் செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள பல்வேறு தளங்களுக்கு நேரடி விஜயங்களையும் செய்யவுள்ளனர். 

TOTAL VIEWS : 755
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
b9veg
  PLEASE ENTER CAPTA VALUE.