இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையே பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
2017-10-10 17:31:17 | General

இலங்கை மற்றும் பின்லாந்துக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பினை மென்மேலும் விரிவுபடுத்துவதற்கும் பின்லாந்தின் தொழில் முயற்சியாளர்களை அதிகளவில் இலங்கைக்கு அழைத்துவரவும் அதன் ஊடாக இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளைப் பலப்படுத்தவும் அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


பின்லாந்துக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தில் பின்லாந்தின் பிரதான 3 தொழில் முயற்சி நிறுவனங்களுடன் கலந்துரையாடியபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கடந்த திங்கட்கிழமை ஹெல்சின்கி நகர பின்லாந்து மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்லாந்தின் உத்தியோகபூர்வ இறக்குமதிக் கடன் நிறுவனமான பின்வேரா , நோர்டிக் முதலீட்டு வங்கி மற்றும் பின்லாந்தின் முன்னணி தொழில்நுட்ப சேவை வழங்கல் நிறுவனமான ஒடோடெக் ஆகிய நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தமது நிறுவனங்களின் சேவைகள், கடமைப் பொறுப்புகள் மற்றும் பல்வேறுபட்ட துறைகளில் தமது நிறுவனங்களுக்கு மேற்கொள்ள முடியுமான சேவைகள் தொடர்பாக அந்த நிறுவனங்களினால் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.

வேகமான அபிவிருத்திப் பாதையில் காலடி வைத்துள்ள இலங்கையில் தம்மால் மேற்கொள்ள முடியுமான முதலீடுகள் மற்றும் கருத்திட்டங்கள் தொடர்பாகவும் நிறுவனத் தலைவர்கள் தகவல்களை முன்வைத்தனர்.


முதலீடு, நிதியுதவி, கழிவுகள் ஊடாக எரிசக்தி உற்பத்தி, குடிநீர் வழங்கல் போன்ற பல துறைகள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
ஒடோடெக் நிறுவனம் 1990 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மேற்கொள்ளும் குடிநீர்த் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 


துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க , பின்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் ஜயந்த பலிபான, பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி, விசேட உரிமையாளர் சென்ட்ரா பெரேரா மற்றும் இலங்கைக்கான பின்லாந்தின் கொன்சியுலர் ஜெனரல் ஏமஸ் சிறில் டேவிட் ஜூலென்பர்கல் ஆகியோர் இலங்கைத் தூதுக் குழுவில் அடங்கியிருந்தனர்.

TOTAL VIEWS : 354
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
jn4zu
  PLEASE ENTER CAPTA VALUE.