ரஜினியின் இலங்கை பயணத்தை எதிர்த்தவர்களிடம் பிரபல நடிகை அதிரடி கேள்வி
2017-03-27 15:13:36 | General

ரஜினியின் இலங்கை பயணத்தை எதிர்த்தவர்களிடம் நடிகை கஸ்தூரி அதிரடி கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் புதிய வீடுகளைப் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க இருந்தார்.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த் தனது இலங்கைப் பயணத்தை ரத்துசெய்தார்.

இந்நிலையில், ரஜினியின் பயணத்தை எதிர்த்தவர்களிடம் நடிகை கஸ்தூரி அதிரடி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதில், ரஜினியின் இலங்கை பயணத்தை எதிர்ப்பவர்கள் லைகா நிறுவனத்திற்கு ரெண்டு வருடம் படம் பண்ணும் போது என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இப்போ என்ன புது ஞானோதயம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

TOTAL VIEWS : 1027
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
w8fys
  PLEASE ENTER CAPTA VALUE.