இளையராஜா தரப்பின் விளக்கம்
2017-03-20 18:15:48 | General

அறிவித்தல் அனுப்பியது ஏன் என்று இசைஞானி இளையராஜா தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


காப்புரிமை விவகாரங்களில் இளையராஜாவுக்கு ஆலோசகராக இருக்கும் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி;


பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அறிவித்தல் அனுப்பிய விவகாரத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அறிவித்தல் அனுப்புவது என்பது வழக்கமான நடைமுறைதான்.

இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதியுடன் உரிய காப்புரிமை தொகை செலுத்தி பயன்படுத்திக்கொள்ளுமாறு அந்த அறிவித்தல் கூறப்பட்டுள்ளது. இதை முறைப்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாகும்.

சாதாரண மேடைக்கச்சேரி செய்பவர்களிடமிருந்து காப்புரிமை எதுவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வணிக நோக்கத்துடன் பாடல்களைப் பயன்படுத்துவோர் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றார்.

 

TOTAL VIEWS : 1037
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
l6njv
  PLEASE ENTER CAPTA VALUE.