ஒரு வயது கூட நிரம்பாத மகனுக்கு ஒன்றரை கோடிக்கு கார்
2017-11-14 15:34:50 | General

இந்தி நடிகர் சையஃப் அலி கான் ஒரு வயது கூட நிரம்பாத தனது மகனுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை குழந்தைகள் தினப் பரிசாக அளித்துள்ளார்.

பாலிவுட் நட்சத்திரங்களான கரினா கபூர், சையஃப் அலிகான் தம்பதியருக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தைமூர் அலிகான் என பெயர் சூட்டி செல்லமாக வளர்த்து வருகின்றனர்.

வரும் டிசம்பர் மாதம் ஒரு வயதாகும் தைமூர் அலி கானுக்கு, ஒன்றரை கோடி, ரூபாய் மதிப்பிலான, ஸ்வான்கி எஸ் ஆர் டி சொகுசு காரை தந்தை சையஃப் அலி கான் பரிசகா அளித்துள்ளார்.

இந்த ஆடம்பரக் காரில் குழந்தை அமர்வதற்கு என்று சிறப்பு இருக்கையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தனது மகனுக்கு சிகப்பு நிறம் மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த நிறத்திலேயே கார் வாங்கியதாகவும் நடிகர் சையஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.

TOTAL VIEWS : 307
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
oc3yp
  PLEASE ENTER CAPTA VALUE.