ஒலுவிலில் காரிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு
2017-08-07 13:39:52 | General

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுவனின் வீட்டிற்கு அண்மையில் உள்ள வீதியருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள்ளிலிருந்து ஐந்தரை வயது சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீட்கப்பட்ட சிறுவன் ஒலுவில் 06 ஆம் பிரிவின் அன்சாரி ஜும்ஆ பள்ளி வீதியினைச் சேர்ந்தவர் என லாபீர் இன்சாப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சிறுவன் ஒலுவில் அல்ஜாயிஷா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவராவார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01 மணியளவில் தனது வீட்டிலிருந்து சிறிய துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் வீடு திரும்பாததால் பிற்பகல் 2.30 மணியிலிருந்து பிரதேசதம் முழுவதும் தனது உறவினர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இச்சிறுவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் வகையில் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளில் அறிவிப்புகள் விடுத்தும் தேடுதலை மேற்கொண்டனர்.

மாலை 5.30 மணியளவில் கரின் உரிமையாளர் காரை திறந்து பார்த்த வேளையில் சிறுவனின் சடலம் காரிற்குள் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விடயத்தினை சிறுவனின் உறவினரிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உறவினர்கள் சிறுவனின் சடலத்தினை ஒலுவில் மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்னர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட அக்கரைப்பற்று மெஜஸ்ரேட் பதில் நீதிபர் ஏ.எச்.சமீம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்திசாலைக்கு எடுத்துச் சென்று பிரதேச பரிசோதனையின் பின்னர் உடலை உறவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

TOTAL VIEWS : 1165
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
wzl2c
  PLEASE ENTER CAPTA VALUE.