198 புள்ளியுடன் நீர்கொழும்பு மாணவன் முதலிடத்தில்; தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணம் கொழும்பு மாணவிகள் முதலிடம்
2017-10-06 09:56:07 | General

ந.ஜெயகாந்தன்


5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளைப் பெற்று நீர்கொழும்பு ஹரிச்சந்திர மகா வித்தியாலய மாணவன் தினுக கிருஷான்குமார் அகில இலங்கை ரீதியில் தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.


இதேவேளை, யாழ்ப்பாணம் சென். ஜோன் பொஸ்கோ ஆரம்ப வித்தியாலய மாணவி உதயகுமார் அனந்திகா மற்றும் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவி நிர்ஜா ரவீந்திரராஜா ஆகியோர் 194 புள்ளிகளைப் பெற்று தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே 5 ஆம் இடத்தையும் தமிழ் மொழிமூல மாணவர்களுக்கிடையே முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்.


கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு வெளியாகியிருந்த நிலையில், இந்தப் பெறுபேற்றுக்கமைய அகில இலங்கை ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதல் நான்கு இடங்களைப் பெற்ற 16 மாணவர்களின் பெயர் விபரங்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்தன. 


இதன்படி 198 புள்ளிகளைப் பெற்று நீர்கொழும்பு ஹரிச்சந்திர மகா வித்தியாலய மாணவன் தினுக கிருஷான்குமார் முதலாமிடத்தையும் , கணேமுல்ல வெலிபில்லவ கனிஷ்ட பாடசாலையின் மாணவி இந்துமினி ஜயரட்ன மற்றும் துல்கிரிய கனிஷ்ட பாடசாலையின் மாணவன் சஞ்சய நயனஜித் ஆகியோர் 197 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் கடவத்த கிரில்லவெல ஆரம்பப் பாடசாலை மாணவன் தருள் சஹஸ் தர்மரட்ன 196 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். 


மேலும் 195 புள்ளிகளைப் பெற்று குளியாப்பிட்டிய , பூகொட , தெல்கொட , திவுலப்பிட்டிய , களுத்துறை , இரத்தினபுரி , மாபாகடவௌ மற்றும் உகன ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் 12 மாணவர்கள்  4 ஆம் இடத்தைப் பெற்றுள்ளனர். 


எனினும், அகில இலங்கை ரீதியில் தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே முதல் 4 இடங்களைப் பெற்ற 16 பேரில் எந்தவொரு தமிழ் , முஸ்லிம் மாணவரும் உள்ளடங்கவில்லை.  இதேநேரம் நேற்று மாலை வரை கிடைக்கப்பெற்ற பெறுபேற்று தகவல்களுக்கமைய யாழ்ப்பாணம் சென். ஜோன் பொஸ்கோ ஆரம்ப வித்தியாலய மாணவி உதயகுமார் அனந்திகா மற்றும் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவி நிர்ஜா ரவிந்திரராஜா ஆகியோர்  194 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூல மாணவர்களுக்கிடையே அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளனர்.

 

TOTAL VIEWS : 985
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
k6frn
  PLEASE ENTER CAPTA VALUE.