கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிற்கு நகர்ந்தது ஒக்கிய
2017-12-01 12:23:52 | Leftinraj

அரேபிய கடலிலுள்ள ஒக்கிய  சூறாவளி தற்போது கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டு  நாட்டிற்கு எதிர்த்திசையில் நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக அச்சுறுத்தி வந்த இந்த சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைந்து விடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் நாட்டின் பல பாகங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என திணைக்களம் இன்று காலை விடுத்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்குஇ வடமத்திய, ஊவா, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் நூறு மில்லி மீற்றலுக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி இடமபெறும் என்றும் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TOTAL VIEWS : 434
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
wmz7r
  PLEASE ENTER CAPTA VALUE.