மகிந்தவை கடும் சீற்றமடைய வைத்த கேள்வி
2017-09-12 11:23:54 | General

ந.ஜெயகாந்தன்


தொலைத்தொடர்பு  ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நிதியை பயன்படுத்தி "சில்' துணி விநியோகித்த குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு முன்னாள் பணிப்பாளர்  அனுஷ  பெல்பிட்ட ஆகியோரை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.


நேற்று திங்கட்கிழமை முற்பகல் அங்கு சென்ற மகிந்த ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அவர்கள் இருவரையும் பார்வையிட்டு நலன் விசாரித்துள்ளார்.


இதன்போது மகிந்த ராஜபக்ஷவுடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சென்றிருந்தனர்.
சிறைச்சாலைக்குள் சென்ற மகிந்த ராஜபக்ஷ  அந்த  இருவரையும் பார்வையிட்ட பின்னர் வெளியே திரும்பிய  போது அங்கே நின்ற  ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார்.


இதன்போது ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகள் தொடர்பாக மகிந்த ராஜபக்ஷவுக்கு கோபம் ஏற்பட்டதுடன் எனது கோபத்தைக் கிளர வேண்டாம். நானே சில் துணியை விநியோகிக்க உத்தரவிட்டவன் என்பதனை  ஏற்றுக்கொள்வதாகவும், இதில் தவறுகள் கிடையாது எனவும் தெரிவித்த அவர், பொய்களைக் கூறி ஊடக கண்காட்சிகளை நடத்த வேண்டாமென ஊடகவியலாளர்களை பார்த்து கடும் கோபத்தில் தெரிவித்துள்ளார்.


சிறைச்சாலைக்குள் சென்று அவர்கள் இருவரையும் பார்வையிட்ட பின்னர் வெளியே வந்த மகிந்த ராஜபக்ஷவை பார்த்து ‘‘நீங்கள் முக்கியமான பதவியில் இருந்தவர் ஏன் இது போன்ற குற்றச் செயலுக்கு இடமளித்தீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றையடுத்தே மகிந்த கடும் கோபமடைந்துள்ளார்.
இதன்போது அவர்  மேலும் பதிலளிக்கையில்;


 "இது தவறு அல்ல. இதனைக் குற்றமாகக் காட்ட முயற்சிக்கின்றனர். மக்களின் கோரிக்கைக்கமையவே அது விநியோகிக்கப்பட்டது. அத்துடன் அது  தேர்தலை இலக்கு வைத்து செய்யப்பட்டது அல்ல. அவர் நீதிமன்றத்தில் வழங்கிய வாக்கு மூலத்தை எடுத்து பார்த்தால் இதன் உண்மை நிலைமையை அறிந்துகொள்ளலாம்.

இதில் எங்கும் எந்தவொரு திருட்டும் இடம்பெறவில்லை. இந்த விடயத்தில் இவர்கள் குற்றவாளியாக ஆக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் மேன் முறையீடு செய்து சட்ட தர்க்கங்களை முன்வைக்கும் உரிமை உள்ளது. சில் துணி விநியோகிப்பதற்கு நானே உத்தரவிட்டவன். நான் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். இதில் தவறு கிடையாது' என தெரிவித்துள்ளார்.

 

TOTAL VIEWS : 1502
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
qxqc1
  PLEASE ENTER CAPTA VALUE.