நீதிமன்றம் சென்ற பொதுஜன பெரமுன
2018-01-08 18:25:42 | Leftinraj

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவால் பாணதுறை, வெலிகம மற்றும் திரப்பனை ஆகியவற்றுக்காக முன்வைக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அக் கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இதனை தாக்கல் செய்துள்ளார். 

மேலும் இந்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட எட்டுப் பேர் பெயரிடப்பட்டுள்ளனர். 

தமது கட்சியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையானது சட்டத்திற்கு முரணானது என கூறியுள்ள மனுதாரர்கள் அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்ள உத்தரவிடுமாறும் உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர். 

அத்துடன் குறித்த மனுவை விசாரித்து முடிக்கும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதிக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர். 

TOTAL VIEWS : 522
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
grt7m
  PLEASE ENTER CAPTA VALUE.