மலர்ந்தது தமிழரசு என்றவர்கள் எமது மக்களை கையேந்திகளாகவே நிறுத்தியுள்ளனர்
2017-12-05 18:54:14 | Leftinraj

மத்திய அரசில் தங்களுக்கான சலுகைகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டுஇ சிங்கள அரசு எமது மக்களுக்கு ஒன்றுமே செய்வதில்லை என எமது மக்கள் முன்பாகக் கூறித் திரிகின்ற சுயலாப தமிழ் அரசியல்வாதிகள் வடக்கு மாகாண சபையை பொய்யான வாக்குறுதிகளால் எமது மக்களிடமிருந்து பறித்தெடுத்துஇ 'மலர்ந்தது தமிழர் ஆட்சி' எனக் கூறிக் கொண்டவர்கள;  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு வெறும் வாய்ச் சத்தங்களால் போதித்துக் கொண்டிருக்கின்றார்களே அன்றி இதுவரையில் எதுவுமே செய்ததாக இல்லை - என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மின்வலு புதுப்பிக்கத்தக்க சக்தி பெற்றோலிய வளங்கள் அபிவிருத்த கடந்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு  தொடர்பில் எடுத்துக் கொண்டால்  வடக்கு மாகாணத்தைப் பொறுத்த அளவில் ஆளணிகளின் பற்றாக்குறைகளே மாபெரும் பிரச்சினையாக இருப்பதாகத் தெரிய வருகின்றது. 

அந்த வகையில்இ மின்மானி வாசிப்போர் பற்றாக்குறை பாரியளவில் நிலவுவதாகவே தெரிய வருகின்றது. இதனால்இ மாதாந்த மின் கட்டணப் பட்டியல்கள் பயனாளிகளுக்குக் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகின்றன.

முலi;லத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புஇ வேணாவில் ஆகிய பகுதிகளில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த ஒக்டோம்பர் மாதம் வரையில் ஒரு வருட காலமாக மின் கட்டணப் பட்டியல் கிடைக்கப்பட்டிருக்கவில்லை என அம் மக்கள் முறையிட்டிருக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலும்இ சில பகுதிகளுக்கு கடந்த வருடம் ஒக்டோம்பர் மாதத்திலிருந்து இந்த வருடம் ஒக்டோம்பர் மாதம் வரையில் மின் கட்டணப் பட்டியல் வழங்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிய வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம் ஆட்காட்டிக்குளம் உள்ளிட்ட சில கிராமங்களுக்கு மின் வாசிப்பாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையே வருவதாக அம் மக்கள் தெரிவிக்கின்றனர். 

யாழ்ப்பாணத்திலும் இதே நிலையே எற்பட்டுள்ளதாக மக்கள் முறையிடுகின்றனர்.

அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் இத்தகைய நிலைமைகள் பரவலாகக் காணப்படுவதுடன்;இ குறிப்பாக மீள்குடியேற்ற பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளிலேயே இந்நிலை மிக அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது.

எமது மக்களின் நிலைமைகள் குறித்து இங்கு இருப்பவர்களுக்கு நன்கு தெரியும் என்றே நம்புகின்றேன். கௌரவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களும் நன்கறிவார்கள். 

கடந்தகால யுத்தமானது எமது மக்களை பல்வேறு அழிவுகளுக்கு உட்படுத்தி  பொருளதார ரீதியில் தலைதூக்க விடாத ஒரு நிலைக்குள் தள்ளிவிட்டுள்ளது. எமது மக்கள் இந்த நிலையிலிருந்து தலைநிமிர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு தயாரான போதிலும் அதற்கு அவகாசம் வழங்காதவாறு பல்வேறு தடைகள் - புறக்கணிப்புகள் - பாரபட்சங்கள் - முப்பது வருட கால யுத்தம் நடந்து முடிந்தும; காட்டப்படுகின்ற பாகுபாடுகள் - சுரண்டல்கள் - வளங்களின் முடக்கங்கள் - மத்திய அரசிலும் தொடர்கின்றன மாகாண அரசிலும் தொடர்கின்றன. 

மத்திய அரசில் தங்களுக்கான சலுகைகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு சிங்கள அரசு எமது மக்களுக்கு ஒன்றுமே செய்வதில்லை என எமது மக்கள் முன்பாகக் கூறித் திரிகின்ற சுயலாப தமிழ் அரசியல்வாதிகள் வடக்கு மாகாண சபையை பொய்யான வாக்குறுதிகளால் எமது மக்களிடமிருந்து பறித்தெடுத்துஇ 'மலர்ந்தது தமிழர் ஆட்சி' எனக் கூறிக் கொண்டவர்கள;  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு வெறும் வாய்ச் சத்தங்களால் போதித்துக் கொண்டிருக்கின்றார்களே அன்றிஇ இதுவரையில் எதுவுமே செய்ததாக இல்லை.

மேலும் இயற்கையும்கூட எமது மக்களைத் தலைநிமிர விடாதுஇ தொடர்ந்தும் பாதித்துக் கொண்டே இருக்கின்றது.

இத்தகையதொரு நிலையில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இந்த நாட்டில் வறுமைக்கு இன்று முகவரியாக இருக்கின்ற எமது மக்களுக்குஇ மாதாந்தம் மின் கட்டணப் பட்டியல் கிடைக்காத நிலையில்இ இப்படி மாதக் கணக்கில்இ வருடக் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டு ஒரே தடவையில் அந்தக் கட்டணங்களை அறிவிடுகின்றபோதுஇ எமது மக்கள் அதற்கான நிதிக்கு எங்கே போவார்கள்? என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு மாத மின் கட்டணத்தையே செலுத்தவதற்கு பெரும் பாடு படுகின்ற எமது மக்களுக்கு இது ஒரு பாரிய தண்டனையாகவே அமைந்துவிட்டுள்ளது என்பதால்  இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு கௌரவ அமைச்சர் அவர்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம் அவ்வாறு மின் கட்டணப் பட்டியல் நீண்ட காலமாகக் கிடைத்திராத மக்களது பாக்கித் தொகைகளை அம் மக்கள் மீளச் செலுத்துவதற்கு அவர்களுக்கு ஒரு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதாவதுஇ மின் கட்டணம் எத்தனை மாதங்களுக்கு தாமதமாக வழங்கப்பட்டதோஇ அத்தனை மாத கால அவகாசத்தில் அந்தப் பாக்கித் தொகையை தவணை அடிப்படையில் மீள அறவி;ட்டால் மாத்திரமே எமது மக்களால் அதனை ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதே நேரம் இனியும் இத்தகைய நிலை ஏற்படாத வகையில்இ அந்தந்த மாதங்களுக்கான மின் கட்டணப் பட்டியல்கைள பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக உரிய வகையில் அதற்கான ஆளணிகளை நியமிக்குமாறும் மேலும் தற்போது வடக்கு மாகாணத்தில் இலங்கை மின்சார சபையினைப் பொறுத்தமட்டில் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களும் காணப்படுவதாகக் கூறப்படுகின்ற நிலையில் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கும் கௌரவ அமைச்சர் அவர்கள் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும்இ யாழ் மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற மின்தடை குறித்தும் கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

இந்நிலை மேலும் சீர் செய்யப்பட வேண்டியுள்ளது. 

TOTAL VIEWS : 237
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
yb9bf
  PLEASE ENTER CAPTA VALUE.