புலிகள் மீண்டும் தலைதூக்குகிறார்களா?
2017-08-09 10:29:27 | General

டிட்டோகுகன்


விடுதலைப் புலிகள் மீண்டும் உருவெடுப்பதாக தோற்றப்பாடுடைய தகவல்கள் பரவலாக வெளியாகிவரும் நிலையில், அது தொடர்பில் அரசாங்கம் சார்பில் பொறுப்பான பதிலொன்று பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சார்பில் சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டுள்ளது.  

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி.யான பத்ம உதயசாந்த குணசேகர இந்த விடயத்தை வலியுறுத்தினார். 


ஆவா குழுத் தலைவர் உட்பட அக்குழுவைச் சேர்ந்த 6 பேர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று (நேற்று செவ்வாய்க்கிழமை) அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.

புலிகள் மீண்டும் உருவெடுப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிப்பதான தோற்றப்பாடே இந்த செய்திகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பொலிஸ் மா அதிபரும் இதையொத்த கருத்தொன்றை அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். 


புலிகள் மீண்டும் உருவெடுப்பதான தோற்றப்பாடொன்றே வெளியாகியுள்ள இந்த தகவல்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அரசாங்கம் என்ற வகையில் இது தொடர்பில் பொறுப்பான பதிலொன்றை வழங்க முடியுமா? என்று அவர் இதன்போது கேள்வி எழுப்பினார். 


சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரிடமே பத்ம உதயசாந்த குணசேகர எம்.பி. இந்த கேள்வியை எழுப்பினார். எனினும், சம்பந்தப்பட்ட அமைச்சர் நேற்றைய தினம் சபைக்கு சமுகமளித்திருக்காத நிலையில், இந்தக் கேள்வியை அவரது கவனத்துக்கு முன்வைப்பதாக ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக இதன்போது தெரிவித்தார்.   

 

TOTAL VIEWS : 916
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
vauf9
  PLEASE ENTER CAPTA VALUE.