அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்
2018-01-12 09:29:36 | Leftinraj

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக அந்த அறிக்கையின் பிரதி மத்திய வங்கியின் ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் செயலாளரினால் நேற்று இந்த அறிக்கை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை 2008 முதல் 2014ம் ஆண்டு வரை இடம்பெற்ற திறைசேரி பிணைமுறி வழங்கல் சம்பந்தமாகவும் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி வழங்கல் சம்பந்தமாகவும் விரிவான கணக்காய்வு செய்வதற்கு நிதிச்சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

TOTAL VIEWS : 227
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
oqfe4
  PLEASE ENTER CAPTA VALUE.