அரசியலமைப்பை உருவாக்க அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு
2017-08-12 13:23:23 | General

புதிய அரசியலமைப்பை வரையும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் முழுமையான ஆதரவையும் வழங்கும் என்று இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் உறுதி அளித்துள்ளனர்.

குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்களான ரொட்னி பிரீலிங்குசென், ஹென்றி கியூலர் ஆகியோர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் நேற்றுமுன்தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இந்தச் சந்திப்புகளின் போது, அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும், எல்லாப் பிராந்தியங்களின் செழிப்பை வலுப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு, அமெரிக்கா முழு ஒத்துழைப்பை வழங்குவதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

TOTAL VIEWS : 435
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
zby8y
  PLEASE ENTER CAPTA VALUE.