டீ.கே.பீ.தசநாயக்க நிபந்தனை பிணையில் விடுதலை
2018-01-12 13:30:03 | Leftinraj

11 பேரை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கமாண்டர் டீ.கே.பீ.தசநாயக்க உள்ளிட்ட அறுவர் நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்றைய தினம் (12)  நீதிமன்றில் முன்னிலைப்படுதப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன  மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.

இதற்கமைய இவர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் பிரதி சனிக்கிழமைகளில் காலை 9-12 மணி வரையான காலப்பகுதியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

TOTAL VIEWS : 670
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
7ndvw
  PLEASE ENTER CAPTA VALUE.