ஜெனீவா கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; இலங்கை விடயங்கள் இல்லை
2017-09-11 10:58:51 | General

டிட்டோகுகன்


ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது அமர்வில் இலங்கை சம்பந்தப்பட்ட விடயம் எதுவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாத போதிலும்,  இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரங்கள் தொடர்பில் அரச சார்பற்ற அமைப்புகளின் பக்க நிகழ்வுகளில் ஆராயப்படவுள்ளது. 


அந்த வகையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கலந்தாராயும் பொருட்டு அரச சார்பற்ற அமைப்புகளினால் இதுவரை 15 பக்க நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான அமைப்பு, அனைத்து வடிவங்களிலுமான பாகுபாடுகள் மற்றும் இனவாதத்துக்கு எதிரான சர்வதேச இயக்கம், பசுமை தாயகம் அமைப்பு உள்ளிட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அங்கீகாரம் பெற்ற அரச சார்பற்ற அமைப்புகளே இலங்கை தொடர்பான இந்த பக்க நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. 


இன்று திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது அமர்வு நடைபெறவுள்ள நிலையில், சில சமயங்களில் இலங்கை பற்றிய அரச சார்பற்ற அமைப்புகளின் பக்க நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் கூடும். 


2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான முக்கிய விடயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், அதன் நிமித்தம் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் இலங்கையில் இதுவரை காணப்பட்டிருக்கும் முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதற்கான முன்னேற்பாடாக மேற்படி பக்க நிகழ்வுகள் அரச சார்பற்ற அமைப்புகளினால் பயன்படுத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

TOTAL VIEWS : 605
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ssqi8
  PLEASE ENTER CAPTA VALUE.