பனியுடன் கூடிய காலநிலையால் கிழக்கில் மக்கள் அவதி
2016-12-05 12:23:21 | General

நாவிதன்வெளி நிருபர்


கிழக்கு மாகாணமெங்கும் பனியுடன் கூடிய காலநிலை நிலவுவதால் பொது மக்கள், குழந்தைகள் பெரும் அவஸ்தைக்குள்ளாகி வருகின்றனர்.


தடிமல், காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் ஏற்பட்டு வருவதுடன் ஆஸ்பத்திரி வெளிநோயாளர் பிரிவுகளில் அதிகளவு மக்கள் சிகிச்சை பெற வருவதையும் காண முடிகிறது.


அதிகளவில் சிறு குழந்தைகள் நோய்களின் தாக்கத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மாலையானதும் மக்கள் வீதியில் வருவதற்குத் தயங்குகின்றனர். முற்பகலில் நல்ல வெயிலும் எறிக்கத் தொடங்கியுள்ளது.


இதேவேளை நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் சுகாதார வைத்திய அத்தியட்சகர் அலுவலக மருத்துவர்களின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

TOTAL VIEWS : 8329
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
gek8t
  PLEASE ENTER CAPTA VALUE.