பிரதம விருந்தினராக இளவரசர் எட்வேர்ட்?
2018-01-08 09:49:09 | General

இலங்கையின் 70ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பிரித்தானியாவின் இளவரசர் எட்வேர்ட் பிரதம விருந்தினராக பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு  அலுவல்கள் அமைச்சின் அதிகாரியொருவரை  மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையின்  70 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி காலிமுகத்திடலில் 
இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரித்தானிய மகாராணி  இரண்டாவது எலிசபெத் மற்றும் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் ஆகியோரின் இளைய  மகனான இளவரசர் எட்வேர்ட் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக உள்நாட்டு அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் ஊடாக இளவரசர் எட்வேர்ட்டுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

400 ஆண்டுகள் அந்நியர் ஆதிக்கத்தில் இருந்த இலங்கை 150 ஆண்டுகள் பிரித்தானியரின் ஆதிக்கத்தில் இருந்து 1948 ஆம் ஆண்டு  விடுதலை பெற்றது.

இதையடுத்து 1998ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கையின் 50ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பிரித்தானிய மகாராணியின்  பிரதிநிதியாக அவரது மூத்த மகன் இளவரசர் சார்ள்ஸ் பிரதம விருந்தினராக பங்கேற்றிருந்தார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள 70 ஆவது  சுதந்திர தின  நிகழ்வில் பிரித்தானியாவின் இளவரசர் எட்வேர்ட் பிரதம விருந்தினராக பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன்  தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் அரசக் குடும்பத்தினருக்கும் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்குமாறு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

 

TOTAL VIEWS : 546
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
d8epa
  PLEASE ENTER CAPTA VALUE.