கொழும்பு நகரின் பயணிகள் போக்குவரத்துக்காக 18 மின்சார பஸ்கள்
2018-01-13 14:15:57 | Leftinraj

கொழும்பு நகரின் பயணிகள் போக்குவரத்துக்காக 18 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை 50 மின்சார பஸ் வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக 50 கோடி ரூபாவை திறைசேரியிடமிருந்து பெற்றுள்ளது.

இதனை பயன்படுத்தி முதற்கட்டமாக 18 பஸ்களை கொள்வனவு செய்யவிருப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்த்தன தெரிவித்தார்.

மின்சார பஸ் வண்டிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

TOTAL VIEWS : 862
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
is2md
  PLEASE ENTER CAPTA VALUE.