வட, கிழக்கில் 50,000 கல் வீடு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
2017-08-19 08:29:58 | General

30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிரந்தரமான கல் வீடுகளை வழங்குவதற்காக அமைச்சரவைப் பத்திரம் பிரதம ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.


இந்த நிரந்தரமான கல் வீட்டுத் திட்டம் தொடர்பான கேள்வி கோரல்கள் முன்னெடுக்கப்படுவதுடன் அதற்கான நிதிப்படுத்தலுடன் இணைந்த கேள்வி கோரலாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுவது நிரந்தரமான நல்லிணக்கச் செயற்பாடாக நோக்கப்படுவதாக தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி தெரிவித்தார்.


இத்திட்டத்தின் கேள்வி மனுக் கோரல்கள் தொடர்பான வேலைத்திட்டங்கள் தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் ஏனைய அமைச்சுகளையும் நிறுவனங்களையும் இணைத்து முன்னெடுக்கப்படுகின்றன.

 தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்வீட்டுத் திட்டங்களுக்கான தேவைப்பாடுகளும் திட்டத் தயாரிப்பும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்திக் குழுவின் வழிகாட்டலின் கீழ் தேச ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு பிரதமர் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவத்திற்கான அமைச்சரவை குழுவின் சிபாரிசுடன் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என தேச ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி மேலும் தெரிவித்தார். 

TOTAL VIEWS : 644
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
g7dcx
  PLEASE ENTER CAPTA VALUE.