அனைவரும் ஒத்துழையுங்கள்;அரசியல் கைதிகள் வேண்டுகோள்
2017-10-12 16:07:58 | Leftinraj

எங்­கள் நியா­ய­மான கோரிக்கை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்­கும் எமக்கு நீதி கிடைப்­ப­தற்­கு­மாக நாளை வெள்­ளிக் கிழமை வடக்­கில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் முழு அடைப்­புப் போராட்­டத்துக்கு எல்­லோ­ரும் முழு­மை­யான ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டும் என்று உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

அவர்­கள் தமது உற­வி­னர்­கள் ஊடாக நேற்­றி­ரவு விடுத்­துள்ள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளாகி நாங்­கள் அர­சி­டம் எமது வழக்­கு­கள் தொடர்­பாக சில கோரிக்­கை­களை முன்­வைத்து வரு­கின்­றோம்.

2009ஆம் ஆண்டு இரா­ணு­வத்­தி­ன­ரால் கைது செய்­யப்­பட்டு தொடர்ச்­சி­யாக 4 வரு­டங்­கள் எந்­த­வித வழக்கு விசா­ர­ணை­க­ளு­மின்றி கொழும்பு 6ஆம் மாடி, பூசா போன்ற சிறைச்­சா­லை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தோம்.

2013ஆம் ஆண்டு எமக்­கெ­தி­ராக வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொட­ரப்­பட்டு 2017ஆம் ஆண்டு வரை 58 தட­வை­கள் வழக்­கிற்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தோம்.

வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தில் தொட­ரப்­பட்ட எமது வழக்கை சாட்­சி­க­ளுக்கு உயி­ரா­பத்து இருப்­ப­தா­கக் கூறி அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன்­றத்­துக்கு மாற்­றி­யுள்­ள­னர்.

அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன்­றத்­தில் எமது வழக்­குத் தொட­ரப்­ப­டு­மா­யின் மொழிப் பிரச்­சி­னையை எதிர்­கொள்ள நேரி­டு­வ­தோடு அங்கு எமது தரப்­பில் ஒரு சட்­டத்­த­ர­ணி­யை­யும் நிய­மிக்க செய்ய முடி­யாது.

இவ்­வா­றான பல பிரச்­சி­னை­க­ளுக்­கும் மத்­தி­யில் எமது வழக்கை மாற்­றி­யி­ருப்­பது எமக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட அநீ­தி­யா­கவே நாம் கரு­து­கின்­றோம்.

அநீ­தியை எதிர்த்து எமது வழக்கை தொடர்ந்­தும் வவு­னியா நீதி­மன்­றத்­தி­லேயே நடத்­து­மா­றும் துரி­த­மாக வழக்­குக்கு முடி­வைப் பெற்­றுத்­த­ரு­மாறு கோரி­யும் நாம் இன்று (நேற்று) 17ஆவது நாளாக உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ளோம்.

<p>எமது உணவு ஒறுப்­புப் போராட்­டத்­திற்கு ஆத­ர­வா­கப் பல கவ­ன­வீர்ப்பு போராட்­டங்­களை நடத்­திய சகல பொது அமைப்­புக்­க­ளும் நன்­றி­யைத் தெரி­விக்­கின்­றோம்.

நாளை வெள்­ளிக்­கி­ழமை வடக்­கில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் முழு அடைப்­புப் போராட்­டத்­திற்­கும் எல்­லோ­ரும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டும் என்று இரந்து கேட்­டுக் கொள்­கின்­றோம்  என்­றுள்­ளது.

TOTAL VIEWS : 189
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
3owvq
  PLEASE ENTER CAPTA VALUE.