இந்த நிலைக்கு மகிந்தவே காரணம்
2017-03-17 12:42:09 | General

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த 13 ஆம் திகதி வெளியிட்டிருந்த ஊடக அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்ட மறுசீரமைப்பின் மூலம் நாடு அழியப் போகிறது என குற்றம் சுமத்தி முன்னாள் ஜனாதிபதி அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்.


எனினும் மகிந்த வெளியிட்ட அறிக்கையில் அடங்கிய விடயங்கள் திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான தகவல்களும், முன்னுக்கு பின் முரணான பல விடயங்களும் அடங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.


இந்த  நாட்டை சர்வதேச விசாரணைகளை நோக்கி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே தள்ளினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தொலை நோக்கம் கொண்ட செயற்பாடுகள் காரணமாக சர்வதேசத்தின் நம்பிக்கையை மீண்டும் வென்றெடுக்க முடிந்துள்ளது.


காலம் கடந்து போன பழைய கொடிய சட்டதிட்டங்களை மாற்றி நவீன உலகத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒழுங்கம் நிறைந்த சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்துவது தேசத்துரோகம் அல்ல எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

 

TOTAL VIEWS : 653
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
qr6dr
  PLEASE ENTER CAPTA VALUE.