மட்டக்களப்பில் மதுபான நுகர்வு 9.6 லீற்றர்
2016-12-05 16:39:28 | General

பா.கிருபாகரன், டிட்டோகுகன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது  59 மதுபானசாலைகள் உள்ள நிலையில், மதுபான தலா நுகர்வு 9.6 லீற்றர்களாக இருப்பதாக  நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது ஜே.வி.பி.எம்.பி.யான பிமல் ரட்னாயக்க, 2009.05.19 ஆம் திகதிக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்த மதுபான நிலையங்களின் எண்ணிக்கை,  2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் புதிதாக அனுமதி வழங்கப்பட்ட மதுபான நிலையங்களின் எண்ணிக்கை,மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானத்தின் தலா நுகர்வு என்ன என்ற கேள்விகளை எழுப்பினார்.


இதற்கு நிதி அமைச்சு சபாபீடத்தில் சமர்ப்பித்த பதிலில்  2009.05.19 ஆம் திகதிக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில்  48 மதுபானசாலைகள் இருந்தன.

அதன் பின்னர் 2010ஆம் ஆண்டில் 1 மதுபானசாலைக்கும் 2011 இல் 2 மதுபான சாலைகளுக்கும் 2012இல் 2,2013இல்  3, 2014 இல் 2, 2015இல் 1 மதுபானசாலைக்குமென 11 மதுபானசாலைகளுக்கு புதிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.


இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானத்தின் தலா நுகர்வு 9.6 லீற்றர்களாக உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TOTAL VIEWS : 10163
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
q4asr
  PLEASE ENTER CAPTA VALUE.