முகமாலையில் பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கி சூடு; இராணுவம் குவிப்பு
2017-05-19 11:55:21 | General

முகமாலை, கச்சார்வெளி பிரதேசத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து அப்பகுதியில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இனந்தெரியாத நபர் ஒருவரினால், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயமேற்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து வீடுகளை விட்டு வெளியேற வேண்டாமென ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் மக்களுக்கு அறிவித்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், புகையிரத கடவை மற்றும் கச்சார்வெளி சந்திப் பகுதியில் பளை பொலிஸார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். 

TOTAL VIEWS : 1426
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
imr2x
  PLEASE ENTER CAPTA VALUE.