பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதி உத்தரவு
2017-10-06 10:03:35 | General

ரொஷான் நாகலிங்கம்


காணாமல்போனோரின் உறவுகளின் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான கடிதம் கடந்த 20 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் எரிக் பிரசன்ன வீரவர்தன அனுப்பியுள்ளதாகவும் இது தொடர்பான பிரதி தமக்கு கிடைத்துள்ளதாகவும் திருமலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி நா.ஆஷா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;


கடந்த செப்டொம்பர் 6 ஆம் திகதி ஜனாதிபதிக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின் போது எம்மால் மகஜரொன்று கையளிக்கப்பட்டது. அதில் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை எழுத்து மூலம் வழங்க வேண்டுமெனக் கோரியிருந்தோம்.


அத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற கால கட்டங்களில் முப்படைத் தளபதிகளாக இருந்தவர்கள் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த பெயர் பட்டியலை வெளியிடுவது , காணாமல்போன அரச ஊழியர்களின் குடும்பங்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் மற்றும் சிறை மற்றும் தடுப்பு முகாம்களிலுள்ளவர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டுமெனவும் மகஜரில் தெரிவித்திருந்தோம்.


இந்நிலையில் எமது கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலம் கோரியுள்ளார். அங்கு அனுப்பப்பட்ட பிரதி எமக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

TOTAL VIEWS : 959
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
kkfs4
  PLEASE ENTER CAPTA VALUE.