முகாம்களில் வாழ்ந்த வாழ்க்கையை விட 
சொந்த ஊரில் மோசமான வாழ்கி;றோம்
-போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பன்னங்கண்டி மக்கள்-
2017-03-10 16:38:31 | Kobi


இடம்பெயர்ந்துச் சென்று, முகாம்களில் வாழ்ந்த வாழ்க்கையை விட, தற்போது சொந்த ஊரில், மிக மோசமான வாழ்க்கையை நடத்தி வருகின்றோம் என்று, கிளிநொச்சி - பன்னங்கண்டியில், 07 ஆவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள், கவலை தெரிவித்தனர். 
காணி அனுமதிப்பத்திரம், வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோரி, கிளிநொச்சி, பன்னங்கண்டியில், நேற்று 07 ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களே, மேற்கண்டவாறு தெரிவித்தனர். 
இது தொடர்பில், அவர்கள் மேலும் கூறியதாவது, தென்னிலங்கையில் ஏற்பட்ட இன வன்செயல்களால் பாதிக்கப்பட்டு, இங்கு வந்த நாம், பல்வேறு பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டோம். அந்த வகையில்,  பன்னங்கண்டியிலும் 1990ஆம் ஆண்டு தொடக்கம் வாழ்ந்து வருகின்றோம். இடம்பெயர்ந்து சென்று முகாம்களில் வாழ்ந்தபோது, நீர்வசதி, மலசலக்கூட வசதி போன்ற அனைத்து வசதிகளும் இருந்தன. 
தற்போது வாழும் ஓர் அவல நிலையான வாழ்க்கையை, அங்கு நாம் வாழ்ந்ததில்லை. மீள்குடியேற்றத்துக்குப் பின்னர், பல தேர்தல்களை சந்தித்துவிட்டோம். தேர்தல்களின் போது வருகின்ற அரசியல்வாதிகள், தேர்தலில் வெற்றிப்பெற்ற பின்னர், ஒரு மாதத்தில் மூன்று மாதத்தில் உங்களுக்கான வீட்டுத்திட்டத்தை வழங்குவோம் என வாக்குறுதிகளை வழங்கிவிட்டுச் செல்கின்றனர். 
பின்னர், எங்கள் பக்கமே வருவதில்லை. அதிகாரிகளும், தங்களால் சட்டத்துக்குப் புறம்பாக எதுவும் செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டனர். எனவே, எங்கள் வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எங்களை எல்லோரும், தங்களின் தேவைகளுக்கு மாத்திரமே பயன்படுத்திக்கொள்கின்றனர். இவர்கள் நினைத்திருந்தால், எங்களுக்கு மாற்று காணிகளையும் வீட்டுத்திட்டங்களையும் வழங்கியிருக்க முடியும். ஆனால், அதனை எவரும் செய்யவில்லை. இது எங்களை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது என்றனர். 

TOTAL VIEWS : 1036
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
hs1by
  PLEASE ENTER CAPTA VALUE.