இலங்கையருக்கு கனடா விசாவில் மாற்றமில்லை
2017-03-17 18:35:37 | General

இலங்கையர்களுக்காக தமது விசா கொள்கையில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

90 நாட்களுக்கு இலங்கையர்கள் விசா இன்றி கனடாவில் சுற்றுலா அடிப்படையில் பிரவேசிக்க முடியும் என வெளியான தகவல்களை நிராகரிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

வர்த்தக நடவடிக்கைகளுக்காகவோ, சுற்றுலாவுக்காகவோ கனடாவுக்கு செல்லும் இலங்கையர்கள் தொடர்ந்தும் விசா அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயம் என கொழும்புக்கான கனடா உயர்ஸ்தானிகர் அலுவலகம்  தெரிவித்துள்ளது. 

இதன்காரணமாக, தமது நாட்டிற்கு வருவதற்கு முன்னர் உரிய விசா தேவைப்பாடுகளை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

TOTAL VIEWS : 1046
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
7eglw
  PLEASE ENTER CAPTA VALUE.