இளைஞர், யுவதிகளை கல்வியிலிருந்து வெளிநாட்டு மோகம் புறந்தள்ளி விட்டது -முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு.
2017-04-07 11:01:34 | General

வெளிநாட்டு மோகம் இளைஞர்களையும்,யுவதிகளையும் கல்வி நடவடிக்கைகளிலும்,தொழில முயற்சிகளில் இருந்து அவர்களை புறந்தள்ளி வெளிநாடுகளுக்கு செல்வதையே குறிக்கோளாக மாற்றச் செய்து விட்டது என வடக்கு மதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை சாவகச்சேரி கோவிற்குடியிருப்பு பகுதியில் தொழில்திறன் அபிவிருத்தி பயிற்சி நிலைய திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;,
வெளிநாட்டு மோகத்தால் உள்நாட்டில் புரியக்கூடிய தொழில்களை படிப்பை கைவிட்டு மிக வறுமைக்குட்பட்ட நிலையில் வாழ்வதை நாம் கண்டிருக்கிறோம்.
இன்றைய மாணவ சமூகம் தமது கற்றல் நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் அரச உத்தியோகங்களுக்காக ஏங்கி தவம் கிடக்கின்ற நிலை மாற்றப்படல் வேண்டும். 
அரச உத்தியோகங்கள் கிடைக்கின்றவர்கள் அச் சேவைக்கு செல்லட்டும்.ஆனால் ஏனையவர்கள் மனமொடிந்து விழாமல் சுயதொழில் முயற்சிகள் மூலம் சிறப்பாக வாழ முன்வர வேண்டும்.
நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகள் பல அரிய தொழிற்சாலைகளை நிர்மூலமாக்கிவிட்டது. யுத்தத்தால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தொழிற்சாலை வடக்கு அமைச்சின் கீழ் உள்ள தொழிற்துறை திணைக்களம் ஊடாக இனம் காணப்பட்டு  மாகாண நிதியில் 4.5 மில்லியன் ரூபா செலவில் பகுதியளவிலபுனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தொழில் முயற்சியாளர்கள் அவர்களது தொழிலை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு தேவையான தும்பினை இந் நிலையத்தில் உற்பத்தி செய்து வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தென்னை வளம் நிரம்பிய சாவகச்சேரி பிரதேசத்தில் தயாரிக்கப்படுகின்ற தென்னந் தும்பிற்கு தொழில் முயற்சியாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கின்றது.
இங்கு தயாரிக்கப்படுகின்ற தென்னம் தும்பு தரமானதாகவும்,உற்பத்திக்கு உகந்ததாகவும் காணப்படுகின்றமையால் இத் தொழிற்சாலையில் செய்யப்படும் உற்பத்திகள்  ஏற்றுமதிக்கு உகந்ததாகவேஇருக்கும் என எண்ணுகிறேன். 
அந்த காலத்தில் மாணவ மாணவியர் இயற்கையாகவே தமது புத்தகப் படிப்புக்களுடன் தும்பு வேலை, தகர வேலை மற்றும் தோட்ட வேலை போன்ற தொழில் சார்ந்த கற்றல் முறைகளையும் கைக் கொண்டமையால் சாதாரணமாக ஒரு தும்புத்தடியோ அல்லது தும்புக் கயிற்றையோ தயாரிக்க கூடிய அறிவையும் உரம் தயாரிக்கும் அறிவையும் அனுபவத்தையும் பெற்றிருந்தனர். 
அவ் அறிவு அவர்கள் வளர்ந்தவர்களாக மாறியவுடன் பிரதான தொழில் முயற்சியாக அமைந்தது.
அக் காலத்தில் சுயதொழில் மூலமாக கிடைக்கப்பெற்ற வருமானம் குறைந்த அளவாக இருந்த போதும் அவர்கள் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவ்வாறான ஒரு வாழ்க்கை முறைக்கு நாம் திரும்ப மாற முடியுமா என்பது கேள்விக்குறி. 
இன்றைய மாணவ சமூகம் தமது கற்றல் நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் அரச உத்தியோகங்களுக்காக ஏங்கி தவம் கிடக்கின்ற நிலை மாற்றப்படல் வேண்டும்.
அரச உத்தியோகங்கள் கிடைக்கின்றவர்கள் அச் சேவைக்கு செல்லட்டும். ஆனால் ஏனையவர்கள் மனமொடிந்து விழாமல் சுயதொழில் முயற்சிகள் மூலம் சிறப்பாக வாழ முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

TOTAL VIEWS : 2826
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ebu8a
  PLEASE ENTER CAPTA VALUE.