பம்பலப்பிட்டியிலுள்ள உணவகத்தில் சாப்பாட்டில் 'பிளாஸ்டர்"
2017-08-09 12:05:31 | General

பம்பலபிட்டியிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் உண்பதற்கு கொடுக்கப்பட்ட உணவில் மருந்து கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் 'பிளாஸ்டர்" இருந்தமையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மரைன் ட்ரைவ் வீதியிலுள்ள உணவகம் ஒன்றில் உண்பதற்கு கொடுக்கப்பட்ட உணவொன்றில், மருந்து கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் 'பிளாஸ்டர்' இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உணவு உண்பதற்கு சென்ற வாடிக்கையாளர் பிளாஸ்டரைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்; அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 943
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
8fwuo
  PLEASE ENTER CAPTA VALUE.