கபில வைத்தியரட்ணவுக்கு பதிலடி கொடுத்த ஜஸ்மின் சூக்கா
2017-11-17 17:50:17 | Leftinraj

பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகள் குறித்த அண்மைய 50 சம்பவங்களும் அடிப்படையற்றவை எனவும் ஆதாரமற்றவை எனவும் கனடா - வன்கூவரில்   நடைபெற்ற ஐ.நா அமைதி காக்கும் மாநாட்டில் உரையாற்றிய இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரட்ண அசோசியேட்டட் பிரஸ் என்ற சர்வதேச ஊடகத்திற்கு  தெரிவித்திருந்தார்.

இந்த எல்லா சம்பவங்கள் தொடர்பிலும் இலங்கை விசாரணைகளை மேற்கொண்டது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடிவு பெற்று மூடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்காக திட்ட நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இந்த சம்பவங்கள் குறித்து இலங்கை மேற்கொண்டதாக கூறும் விசாரணைகள் பற்றியும் அந்த விசாரணைகளின் முடிவுகள் பற்றியும் முழுமையான விபரங்களை வெளியிடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு சவால் விடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் இந்த தகவல்கள் அனைத்தும் பகிரங்கப்படுத்தப்படுவதுடன் அவை ஐ.நா மனித உரிமைகள் ஆணையருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக முறையிட்டவர்கள் யாரென்றே தெரியாத நிலையில் 50 சிக்கலான சம்பவங்களை ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் விசாரிப்பதென்பது மனித சக்திக்கு சாத்தியமற்றது.

மிகச்சரியாகக் கூறுவதென்றால் நீதிச் செயல்முறையை நோக்கிய இவ்வாறான பொறுப்பற்ற அணுகுமுறையானது இலங்கையில் எந்த ஒரு உள்நாட்டு செயல் முறையையும் வெளிப்படையாகவே நம்பமுடியாது என்பதால் அதனை மறுதலிக்கின்ற நிலைக்கே பாதிக்கப்பட்டவர்களை கொண்டு சென்றுள்ளது.

ஆண் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இந்த குறிப்பட்ட வழக்கினைஇ நிச்சயமாக தனது சொந்த சாட்சியாளர் பாதுகாப்பு அமைப்பிலே குற்றவாளிகளைக் கொண்டதும்இ குற்றஞ் செய்தவர்களே தங்களைத் தாங்கள் விசாரணை செய்வதாக அமையும்.

இலங்கை அரசாங்கம் அல்லாத ஆண் பாலியல் வன்முறை பற்றிய அனுபவம் கொண்ட சுயாதீனமான ஒரு சர்வதேச அமைப்பு மட்டுமே விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்புச் செயலாளரின் கூற்றானதுஇ இலங்கை அரசு தான் அனுப்பிய அமைதி காப்பாளர்களால் கெயிட்டியில் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்புணர்வு பற்றிய குற்றச்சாட்டுகள் மீது எத்தகைய விசாரணைகளை மேற்கொண்டது என்பது பற்றிய கேள்வியையே எழுப்புகிறது.

2013ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ள அனுப்பப்பட்ட இலங்கையின் மேஜர் ஜெனரல்இ பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதித்த மருத்துவ அதிகாரிகளையோ அல்லது முறைப்பாடு செய்தவரையோ நேரடியாக விசாரிக்கவில்லைஇ ஆனால் அவர் தனது படைச்சிப்பாயை குற்றத்திலிருந்து விடுவித்து விட்டதாக அவரே அந்த ஊடகத்திடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கை அரசு இவ்வாறான விசாரணைகளைத் தான் ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் அந்த 50 சம்பவங்கள் மீதும் மேற்கொண்டதா?

2004 மற்றும் 2007 இற்கு இடையிலான காலப்பகுதியில் 134 இராணுவத்தினருக்கு எதிரான சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பில்இ ஐ.நாவால் கண்டறியப்பட்ட அடிப்படை ஆதாரங்கள் இருப்பினும் அரசு எந்தவொரு குற்றவாளியையும் கைது செய்து சிறையில் அடைக்கத்தவறி விட்டது.

இலங்கை மேலும் தனது அமைதி காப்பாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்குமுன்னர் தனது பாதுகாப்பு படையினரை அவர்கள் செய்த குற்றங்களிலிருந்து வழமையாக விடுதலை செய்யும்.

அவர்களது இந்த அனைத்து விசாரணைகள் பற்றியும் கடுமையான வினாக்கள் கேட்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள்அவை பூச்சியம் சகிப்புத்தன்மை என்பதற்கு அர்த்தம் ஒன்று உள்ளது என்பதனை உறுதிசெய்ய விரும்பினால்இ படைவழங்கும் நாடுகள் போலித்தனமான விசாரணைகள் மேற்கொள்வதனை அனுமதிப்பதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை கையிலெடுக்க வேண்டும். அதற்கு இதுவே சரியான தருணம்.” என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்காக திட்ட நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TOTAL VIEWS : 379
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
n5gri
  PLEASE ENTER CAPTA VALUE.