இரும்புக் கூடுகளுக்குள் தமிழர்களை அடைக்காதீர்
2017-09-07 11:23:41 | General

பா.கிருபாகரன், டிட்டோகுகன்


குரங்குகளை அடைக்கும் இரும்புக் கூட்டுக்குள் வடக்குத் தமிழர்களை அடைக்க முயற்சிக்க வேண்டாமென அமைச்சர் சுவாமிநாதனிடம் சிறீதரன் எம்.பி. கூறினார்.


பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உற்பத்தி வரிகள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின்  கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான. சிறீதரன், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக பேசிய போது சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுடன் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டது.


இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தான் தனது கடமையை சரிவரச் செய்வதாக அமைச்சர் சுவாமிநாதன் கூறிய போது, நல்லது ஐயா, "கடமையைச் செய்யுங்கள் பலனை எதிர்பாராதீர்கள்' என சிறீதரன் எம்.பி. கூறினார்.  
பின்னர் சுவாமிநாதன் அரசியல் கைதிகளின் வழக்குகள் மீதான விசாரணை துரிதப்படுத்தப்படுமெனக் கூறியபோது நன்றி ஐயா, உங்களுக்கு கடவுள் அருள் கிடைக்குமென சிறீதரன் கூறினார்.


இந்நிலையில், திடீரென இரும்புப் பொருத்து வீடுகள் பிரச்சினையை எழுப்பிய அமைச்சர் சுவாமிநாதன், வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் பொருத்து வீடுகளை வழங்க  நடவடிக்கை எடுத்தால் தமிழ்க் கூட்டமைப்பினராகிய நீங்கள் அதனை எதிர்க்கின்றீர்கள் எனக் கூறத் தொடங்கிய போது, குறுக்கிட்ட சிறீதரன் எம்.பி. ஐயா. இது பொருத்துவீடுகள் அல்ல இரும்புக் கூடுகள். வடக்கில் யாரும் இரும்புக் கூடுகளில் வாழ்வதில்லை, நாய், பூனை, கிளி, குரங்குகள் போன்றவைகளைத்தான் இரும்புக் கூடுகளில் அடைத்து வைத்திருப்பார்கள் என்றார்.
இதற்கு அமைச்சர் சுவாமிநாதன் ஏதோ கூற முற்பட்டபோது சபைக்கு தலைமை தாங்கியவர் அதற்கு அனுமதிக்கவில்லை. 

TOTAL VIEWS : 860
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
rou0t
  PLEASE ENTER CAPTA VALUE.