ஜனாதிபதியும் வருமான வரி செலுத்த வேண்டும்; நிதியமைச்சர் கூறுகின்றார்
2017-09-11 11:01:59 | General

புதிய சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியும் வருமான வரி செலுத்துவார் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். 


புதிய உள்நாட்டு வரி சட்டமூலம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் சமரவீர இதனைத் தெரிவித்திருக்கிறார்.


வருமான வரியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு விலக்களிப்பதாக பழைய சட்டமூலம் இருந்து வந்தது. 


நகல் வரைபிலும் அதனைத் தொடர்வதற்கு அதாவது வருமான வரியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலக்குப் பெறுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதனை நீக்குவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்று அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.


இந்த வேண்டுகோள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்தே வந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

வரிச் சட்டம் கடந்த வியாழக்கிழமை (செப்டெம்பர்  07) நிறைவேறியிருந்தது. 2018 ஏப்ரலிலிருந்து நடைமுறைக்கு வரும்.

TOTAL VIEWS : 650
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
6esdi
  PLEASE ENTER CAPTA VALUE.