இலங்கையில் குழந்தைகள் பண்ணை; ஆயிரக்கணக்கில் வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யப்பட்ட பிள்ளைகள்; விசாரணை இடம்பெறும்; அமைச்சர் ராஜித
2017-09-22 10:07:39 | General

ஆயிரக்கணக்கான குழந்தைகள் வெளிநாட்டு பிரஜைகளுக்கு 1980 களில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து இலங்கை விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.


சுவீகாரம் மோசடி தொடர்பாக குற்றச்சாட்டுகள் மேலெழுந்திருக்கும் நிலையில் இது தொடர்பாக விசாரணை செய்யப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருக்கிறார். 

வெளிநாடுகளில் சுவீகாரம் எடுக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பாக டி.என்.ஏ. விபர வங்கியொன்றை அரசாங்கம் அமைக்குமென்று அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருக்கிறார். அந்தப் பிள்ளைகளின் உண்மையான பெற்றோர்களையும் உறவினர்களையும் கண்டறிவதற்கு இந்தத் தகவல் வங்கி அமைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


கடந்த புதன்கிழமை நெதர்லாந்தில் தொலைக்காட்சி ஆவணப்படத்திற்கான பேட்டி ஒன்று வெளியிடப்பட்டது. அதன்போது 1980 களில் இலங்கையில் சட்டவிரோதமான குழந்தைப் பண்ணைகள் இருந்தன என்று சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார். பிள்ளைகள் வாங்கப்பட்டோ அல்லது திருடப்பட்டோ மேற்குலகத்தவர்களுக்கு சுவீகாரத்திற்காக விற்கப்பட்டனர் என்று இந்த நிகழ்ச்சியைத் தயாரித்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


முன்னர் அதிகளவுக்கு குழந்தைப் பண்ணைகள் இருந்தன. அவர்கள் குழந்தைகளை சேகரித்து வெளிநாட்டவர்களுக்கு சுவீகாரத்திற்காக விற்பனை செய்திருந்தனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார். இத்தகைய வசதிகள் இருந்ததால் இலங்கை அரசாங்கம் நாடுகளுக்கிடையில் சுவீகாரம் எடுப்பதை இடைநிறுத்தியிருந்தது.

புதிதாக பிறந்த  20 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 22 பெண்கள் சிறைச்சாலை போன்ற நிலைமையில் வைக்கப்பட்டிருந்த விடயம் கண்டறியப்பட்டிருந்தது. 1987 இல் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது இது வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து சட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் வெளிநாட்டு பிரஜைகள் சுவீகாரம் எடுப்பது குறைவடைந்தது என்று அமைச்சர் கூறியுள்ளார். 


செம்பிளா டச்சு நிகழ்ச்சித் திட்டத்தை தயாரிப்பவர்கள் 1980 களில் நெதர்லாந்தில் சுவீகாரம் எடுக்கப்பட்ட இலங்கைப் பிள்ளைகளின் பதிவுகளை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவை பரந்தளவில் தவறானவை என கருதப்பட்டது.  ஆயினும்  மருத்துவர்கள், தரகர்கள் மற்றும் சுவீகாரத் திட்டங்களில் சம்பந்தப்பட்டிருப்போரிடம் தொடர்ச்சியாக நேர்முகம் காணப்பட்டது.

இதன் பிரகாரம் வைத்தியசாலைகளில் புதிதாக பிறக்கும் பிள்ளைகளை கடத்திச் செல்வதில் சம்பந்தப்பட்டிருந்த குழு தொடர்பாகவும் அறியவந்தது. கடத்தப்பட்ட குழந்தைகள் உண்மையான தாய்மாராக பாசாங்கு செய்த நடிப்புத் தாய்மார்களிடம் கையளிக்கப்படுவதாகவும் சுவீகாரம் எடுப்பதற்கு விற்பனை செய்யப்படுவதற்கு முன்னர் அப்பிள்ளைகள் அவ்வாறு கையளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 


1980 களில் இலங்கையிலிருந்து மேற்கு நாடுகளுக்கு 15,000 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் சுவீகாரம் எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர் என்று இந்த நிகழ்ச்சித் தயாரிப்பளர்கள் கூறியுள்ளனர். அவர்களில் 4000 பேர் நெதர்லாந்தில் இருப்பதாகவும் ஏனையவர்கள் பிரிட்டனுக்கும் சுவீடனுக்கும் ஜேர்மனிக்கும் அனுப்பப்பட்டதாகவும் அந்த ஆவணப் படம் கூறுகிறது. 


மரபணு பரிசோதனை செய்வதற்கு பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் தொடர்பாக விசேட முகவர் நிலையத்தை கொண்டிருக்க வேண்டியுள்ளது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண கூறியுள்ளார். மத்துகமவிலுள்ள வைத்தியசாலையொன்றில் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டதாக தனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது என்று நிகழ்ச்சில் பெண்ணொருவர் கூறியுள்ளார்.

ஆனால், அந்தக் குழந்தையை ஆஸ்பத்திரியிலிருந்து உயிருடன் மருத்துவர் ஒருவர் கொண்டு சென்றதை குடும்ப உறுப்பினர் ஒருவர் பார்த்துள்ளார். 


“மருத்துவமனையுடன் தொடர்புபட்ட எவருக்காவது பணத்தைக் கொடுத்து அந்தக் குழந்தையின் தாய் அவர் தான் என்று பாசாங்கு செய்ய சொல்வதாக மற்றொரு பெண் கூறியுள்ளார். “தாய் போன்று நடிக்குமாறு என்னிடம் அவர்கள் கேட்டனர்.

அதன் பின்னர் 2000 ரூபா தந்தார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார். 
மேற்கு நாடுகளைச் சேர்ந்த சுவீகாரம் எடுக்கும் முகவரமைப்புகளுக்கு இடைத்தரகர்களாக மருத்துவர்களும் தாதிமார்களும் செயற்பட்டிருந்தததாக ஆவணப்படத்தை தயாரித்தவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

பிள்ளைகளை சுவீகாரம் எடுப்பதற்காக பெண்களை தாய்மைப் பேறு அடைய வைத்ததாக நிகழ்ச்சியில் ஒரு தரகர் கூறியுள்ளார். தவறான சுவீகாரம் பத்திரங்களை வழங்குவது தொடர்பான குற்றச்சாட்டு பற்றி கூறிய போது தாய்மாராக நடிப்பவர்களும் குழந்தைகளும் மருத்துவமனைகளிலிருந்து திருடப்படுவதாக கூறப்படுகிறது.

அரசாங்கம் இந்த விடயத்தை மிகவும் தீவிரமானதாக கவனத்திற்கெடுக்க வேண்டும். பெற்றோரும் பிள்ளைகளும் அவர்களின் மரபணு பரிசோதனையை கொண்டிருக்கக்கூடிய விசேட முகவரமைப்பை நாங்கள் ஏற்படுத்த வேண்டியுள்ளது.

உண்மையான தாயாரா இல்லையா என்பதை கண்டறிவதற்கு இது இலகுவான முறையாகும். இது தொடர்பான முன்முனைப்பை நான் எடுப்பேன் என்று அமைச்சர் கூறியுள்ளார். 

சட்டவிரோதமாக இது இடம்பெற்றிருந்தால் இது மிகவும் தவறானதாகும். இந்தக் குடும்பங்களின் மனித உரிமைகளை இது மீறுவதாகும். இது தொடர்பாக கவனிக்கப்பட வேண்டியுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

 

TOTAL VIEWS : 978
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
owsd1
  PLEASE ENTER CAPTA VALUE.