இங்கிலாந்து தொடரிலும் ஸ்ரெயின் இல்லை
2017-05-16 17:17:25 | General

காயம் குணமடையாததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் தென் ஆபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின்.


தென் ஆபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்ரெயின் . 33 வயதாகும் இவர், கடந்த நவம்பர் மாதம் பேர்த்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின்போது காயமடைந்தார். அவரது தோள்மூட்டில் தசைநார் சிதைவு ஏற்பட்டது.


இதற்காக சத்திர சிகிச்சை செய்து கொண்ட ஸ்ரெயின் தற்போது வரை ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இடம்பெறவில்லை.
சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் முடிந்தவுடன் ஜூலை 6 ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.


இந்தத் தொடருக்கு ஸ்ரெயின் தயாராகும் வகையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக விளையாடும் தென் ஆபிரிக்கா ‘ஏ’ அணியில் இடம்பிடித்திருந்தார்.
ஆனால் தனது காயம் இன்னும் முழுவதுமாக குணமடையவில்லை என்று ஸ்ரெயின் உணர்கிறார். இதனால் இங்கிலாந்துத் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து டேல் ஸ்ரெயின் கூறுகையில்; ‘காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். ஆனால், நான் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் அதிக நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறது.


ஓடுதல், ஜிம் பயிற்சி மற்றும் மலையேறுதல் போன்ற விடயங்களை செய்து வருகிறேன். ஆனால், பந்து வீசி பயிற்சி எடுக்கவில்லை. அதற்காக இன்னும் நான் தயாராகவில்லை’ என்றார்.

TOTAL VIEWS : 418
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
wph5x
  PLEASE ENTER CAPTA VALUE.