ஐ.பி.எல்.; கெயில், காம்பிர் கதி என்ன?
2018-01-08 09:29:29 | General

11ஆவது  ஐ.பி.எல்.போட்டிக்காக அணிகள் வீரர்களை தக்க வைக்கும் உரிமையின் அடிப்படையில் பல மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், ரி20 ஜாம்பவான் கிறிஸ் கெயில், 
சிறந்த கப்டன் கவுதம் காம்பீரை எந்த அணியும் கோராதது ஆச்சரியத்தையும் அதிர்ச்
சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூர்ரோயல் சலஞ்

சர்ஸ் அணிக்காக விளையாடியுள்ள கிறிஸ் கெயில், ஐ.பி.எல். போட்டிகளில் பெங்களூர் அணிக்காக மட்டும் 91 போட்டிகளில் 3420 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 2012, 2013 இல் அதிக ஓட்டங்கள் குவித்ததற்காக ஒரேஞ்ச் தொப்பி வென்றார். 

5 சதங்கள், அதிகபட்சம் 175 நொட் அவுட், மிகவும் அதிகபட்சமாக 263 சிக்ஸர்கள் என, கெயிலின் சாதனைகள் அதிகம். ஆனால், கடந்த தொடரில் 9 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே அரைச்சதம் கடந்தார். தற்போது நல்ல போர்மில் உள்ள அவர்  வரும் 27 ஆம் திகதி நடக்கும் ஏலத்தின்போது வீரர்கள் ஏலத்தின்போது தக்க வைக்க வாய்ப்புள்ளது. 

அவர் முதல் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி அதன்பிறகே பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு வந்தார். அதனால், இந்த இரண்டு அணிகளில் எந்த அணிக்கு அவர் போகப் போகிறார் என்பதற்கு காத்திருக்க வேண்டும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு முறை சம்பியன் கிண்ணம் வென்று தந்த கவுதம் கம்பிரை தக்க வைக்காததும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அவர் மொத்தம் 131 ஆட்டங்களில் 3634 ஓட்டங்கள் குவித்துள்ளார். 31 முறை அரைச் 
சதம் அடித்துள்ளார். மிகச் சிறந்த ஐ.பி.எல். கப்டனாக கருதப்படுகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வருவதற்கு முன்  டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு அவர் விளையாடியதால், இரண்டில் எந்த அணிக்கு போகப்போகிறார் என்பது ஏலத்தின்போது தெரியும். 

 

TOTAL VIEWS : 293
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ssrl5
  PLEASE ENTER CAPTA VALUE.