கப்டன் மத்யூஸ் அதிருப்தி
2017-07-11 09:39:58 | General

இலங்கை அணியின் பந்து வீச்சு குறித்து திருப்தியடைய முடியாது என அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் தெரிவித்துள்ளார்.


சிம்பாப்வே போன்ற அணியொன்றுடன் 300 ஓட்டங்களைக் குவித்து தோல்வியடைவது என்பது பலவீனமான நிலையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அம்பாந்தோட்டையில் சிம்பாப்வே அணிக்கெதிராக நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் நான்கு விக்கெட்டுகளினால் தோல்வியடைந்தது.


இந்த நிலையில் அணியின் பந்து வீச்சு தொடர்பில் எவ்வித திருப்தியும் கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


2019 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் அணிக்குத் தலைமை தாங்க முடியுமா என்பது குறித்து தனக்குத் தெரியாது எனவும் மத்யூஸ் தெரிவித்துள்ளார்.

 

TOTAL VIEWS : 290
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
myv9e
  PLEASE ENTER CAPTA VALUE.