"கோஹ்லி மட்டுமே எமது இலக்கு"
2017-09-12 11:59:10 | General

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லியை கட்டுப்படுத்துவதே தங்கள் இலக்கு என அவுஸ்திரேலிய அணி தலைவர் ஸ்ரீவன் சுமித் கூறியுள்ளார்.


அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டி வரும் 17 ஆம் திகதி சென்னையில் நடக்கிறது.


இந்தப் போட்டி குறித்து அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்ரீவன் சுமித் கூறுகையில்; இந்தப் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லியை கட்டுப்படுத்து
வதே எங்கள் நோக்கம். 


சிறந்த வீரரான அவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இந்தத் தொடரில் கோஹ்லியை அதிகமான ஓட்டங்கள் குவிப்பதிலிருந்து தடுக்க முடியும் என நினைக்கிறேன்.


இதை நாங்கள் சரியாக செய்தால் சில வெற்றிகளை பெற வாய்ப்பிருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக மோதுவது எப்போதும் கடினமானது தான் என்று கூறியுள்ளார். 

TOTAL VIEWS : 261
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
uiz0i
  PLEASE ENTER CAPTA VALUE.