இந்தியா ஆடமறுப்பு பாகிஸ்தானுக்கு 6 புள்ளிகள்
2016-11-24 16:38:32 | General

மகளிர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்கு இந்தியா அணி மறுத்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு ஆறு தரவரிசைப் புள்ளிகள் வழங்கப்பட்டிருப்பதற்கு பி.சி.சி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


ஐ.சி.சி. அட்டவணைப்படி கடந்த அக்டோபர் முதல் ஆகஸ்ட் வரையில் காலத்தில் பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி விளையாடியிருக்க வேண்டும். ஆனால், இரு நாடுகளிடையிலான பிரச்சினை காரணமாக இந்திய அணி விளையாட மறுத்து விட்டது. 


இதையடுத்து பாகிஸ்தானுக்கு  6 புள்ளிகளை வழங்கியிருப்பதோடு, அந்த அணி தொடரையும் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. ஐ.சி.சி. இதனால் தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ள இந்திய அணி,  உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. 


இதையடுத்து கடும் கோபமடைந்துள்ள பி.சி.சி.ஐ, ஐ.சி.சி.க்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளது. வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியிலிருந்து இந்தியா விலக நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.

TOTAL VIEWS : 1312
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
n5ygb
  PLEASE ENTER CAPTA VALUE.