உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு 28 வருடங்களுக்கு பிறகுதகுதி பெற்றது எகிப்து; காங்கோவை 2 - 1 என வென்றது
2017-10-10 11:27:55 | General

உலகக் கோப்பை தகுதி சுற்றில் காங்கோ அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய எகிப்து அணி 28 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஆப்பிரிக்க நாடுகள் இடையிலான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் எகிப்து  காங்கோ அணிகள் நேற்று கெய்ரோவில் மோதின.

இதில் எகிப்து அணி 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியின் நட்சத்திர வீரரான முகமது சலாஹ் 63வது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு 10 என முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

ஆட்டம் முடிவடைய 2 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் காங்கோ அணி பதிலடி கொடுத்து 1 - 1 என சமநிலையை ஏற்படுத்தியது. 88வது நிமிடத்தில் அந்த அணி வீரர் அர்னால்டு போகா அசத்தலாக கோல் அடிக்க எகிப்து வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கடைசி நிடத்தில் எகிப்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி முகமது சலாஹ் கோல் அடிக்க எகிப்து அணி அபார வெற்றி பெற்றது.

‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ள எகிப்பது அணிக்கு இது 4வது வெற்றியாக அமைந்தது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளதுடன் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. கடைசியாக அந்த அணி 1990ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றிருந்தது.

ஆப்பிரிக்க நாடுகள் பிரிவில் உலகக் கோப்பை தொடருக்கு ஏற்கெனவே நைஜீரியாவும் தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 154
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
zhad7
  PLEASE ENTER CAPTA VALUE.