மெஸ்ஸி ஹாட்ரிக் பார்சிலோனா வெற்றி
2017-09-12 11:55:50 | General

"லா லிகா' கால்பந்து லீக் போட்டியில் மெஸ்ஸி "ஹாட்ரிக்' கோல் அடித்து கைகொடுக்க, பார்சிலோனா அணி 50 என எஸ்பன்யால் அணியை வீழ்த்தியது.


ஸ்பெயினில் உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் "லா லிகா' தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பார்சிலோனா  எஸ்பன்யால் அணிகள் மோதின.


தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அணிக்கு நட்சத்திர வீரர் மெஸ்ஸி, "ஹாட்ரிக்' கோல் (26, 35, 67 ஆவது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். பிக்கே (87 ஆவது), லூயிஸ் லாரஸ் (90) தங்கள் பங்கிற்கு தலா ஒரு கோல் அடித்தனர்.


ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 50 என்ற வெற்றி பெற்றது. ரியல் மாட்ரிட், லெவான்டே அணிகள் மோதிய மற்றொரு போட்டி 1  1 என்ற கோல் கணக்கில் "டிரா' வில் முடிந்தது.


தடை காரணமாக இப்போட்டியில் கிறிஸ்ரியானோ ரொனால்டோ விளையாடவில்லை. பார்சிலோனா அணி, இதுவரை விளையாடிய 
3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

TOTAL VIEWS : 267
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
wd6pj
  PLEASE ENTER CAPTA VALUE.