''ரணதுங்கவின் குற்றச்சாட்டுகளில் எந்தவித உண்மையும் இல்லை''
2017-08-11 10:17:27 | General

அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் அணிக் கப்டனுமான அர்ஜுன ரணதுங்கவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும் அவற்றை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் திலங்க சுமதிபால  தெரிவித்துள்ளார்.


 இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சுமதிபாலவின் குடும்பம் சூதாட்டத்தை  தொழிலாக கொண்டுள்ளதாகவும் இதனால், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பதவியிலிருந்து அவரை வெளியேற்றுவதுடன் மீண்டும் அவர் கிரிக்கெட் சபைக்குள் எந்தப் பதவியிலும் நுழைய விடாது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அர்ஜுன ரணதுங்க தெரிவித்துவரும் குற்றச்சாட்டுகள் குறித்து திலங்க சுமதிபால பதிலளிக்கையில்; 


ரணதுங்கவின் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. தனிப்பட்ட ரீதியிலோ  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சூதாட்டத் தொழிலில் நான் ஒருபோதும் ஈடுபடவில்லை.  அரசாங்கத்தின் மீது ரணதுங்க  மோசமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவராக இருந்தால் முதலில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். 


கிரிக்கெட் சபைக்கான தேர்தலில் பல தடவை தோல்வியடைந்த ரணதுங்கவால் கிரிக்கெட் சபைக்குள் நுழைய முடியாதிருப்பதால் என்மீது அவர் அபாண்டமான பழிகளை சுமத்தி வருகிறார்.

அவற்றை அவரால் நிரூபிக்க முடியாது.  சூதாட்டம் தொடர்பான எந்த தொழிலுடனும் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதை இலங்கை கிரிக்கெட் நிர்வாகமும் ஐ.சி.சி.யும் ஏற்றுக் கொண்ட பின்னரே நான் கிரிக்கெட் சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு  வெற்றி பெற்றேன்.


இதனால் என்மீது ரணதுங்க சுமத்தும் குற்றச்சாட்டுகள்  எதுவும் உண்மையாகிவிடாது எனவும் அவர் எப்போதுமே இவ்வாறான குற்றச்சாட்டுகளை எல்லோர் மீதும் சுமத்தி வருவதாகவும் சுமதிபால தெரிவித்தார். 

TOTAL VIEWS : 255
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
yw0jd
  PLEASE ENTER CAPTA VALUE.