இலங்கை வீராங்கனைகளுக்கு தங்கமும் வெள்ளியும்
2017-07-11 09:48:27 | General

ஆசிய தடகளத்தில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் இலங்கை, வீராங்கனை நிமாலி லியனாராச்சி தங்கப்பதக்கத்தையும் கயந்திகா அபேரட்ண வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர். 


இந்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றிய இந்திய வீராங்கனை அர்ச்சனாவை ஆசிய தடகள போட்டி ஒருங்கிணைப்புக் குழு தகுதி நீக்கம் செய்து பதக்கத்தை பறித்ததையடுத்தே இலங்கை வீராங்கனை நிமாலிக்கு தங்கமும் கயந்திகாவுக்கு வெள்ளியும் கிடைத்தன.


ஆசிய தடகளத்தில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் 2 நிமிடம் 2 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.


இதில் இலங்கை வீராங்கனைகள் நிமாலி லியனாராச்சி 2 ஆவது இடத்தையும் (2 நிமிடம் 05.23 வினாடி) கயந்திகா அபேரட்ண 3 ஆவது இடத்தையும் (2 நிமிடம் 05.27 வினாடி) பிடித்தனர். ஆனால், அடுத்த ஒரு மணிநேரத்தில் புனேயைச் சேர்ந்த 21 வயதான அர்ச்சனாவின் மகிழ்ச்சி எல்லாம் சுக்குநூறானது.

இலக்கை நோக்கி ஓடியபோது, தாங்கள் முந்தக்கூடாது என்பதற்காக அர்ச்சனா வேண்டுமென்றே வழியை மறித்து இடையூறு செய்தார் என்று இலங்கை வீராங்கனைகள் புகார் கூறி சர்ச்சையை கிளப்பினர்.


இதையடுத்து ஆசிய தடகள போட்டி ஒருங்கிணைப்புக் குழு வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தது. இதில் இலங்கை வீராங்கனைகளின் புகாரில் உண்மை இருப்பதாக கருதிய குழு அர்ச்சனாவை தகுதி நீக்கம் செய்து பதக்கத்தைப் பறித்தது.
இதையடுத்து தங்கப்பதக்கம் நிமாலிக்கும் வெள்ளிப்பதக்கம் கயந்திகாவுக்கும் வழங்கப்பட்டன.

TOTAL VIEWS : 327
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
koi7h
  PLEASE ENTER CAPTA VALUE.