இந்திய அணிக்கு தனி விமானம்?
2017-09-12 11:54:06 | General

கிரிக்கெட் போட்டிகளுக்காக பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கும் இந்திய அணிக்கென இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.)  தனி விமானம் வாங்கலாம் என்று அணியின் முன்னாள் கப்டன் கபில்தேவ் யோசனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது;


பி.சி.சி.ஐ. க்கு தற்போது நல்ல வருவாய் கிடைக்கிறது. எனவே பி.சி.சி.ஐ. தனக்கென  தனி விமானம் ஒன்றை வாங்க முடியும். விமானத்தை நிறுத்துவது உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் பி.சி.சி.ஐ. யால் செய்ய இயலும்.


இது இந்திய அணியின் பயண நேரத்தில் அதிகளவு சேமிக்க உதவுவதுடன் போட்டிகளுக்கு இடையே அணிக்கு அதிக ஓய்வு நேரம் கிடைக்கும். இதனை பி.சி.சி.ஐ. 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே செய்திருக்க முடியும்.


இதேபோல் ஐ.பி.எல். போட்டியில் மட்டுமல்லாமல் உலகில் நடைபெறும் இதர ரி20 லீக் போட்டிகளிலும் விளையாட இந்திய வீரர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
சச்சின் டெண்டுல்கர் 100 ஆவது சதம் அடித்த பிறகு அந்தச் சாதனையை இனி எவரும் எட்டப் போவதில்லை யென்று நினைத்தேன்.

ஆனால் சமீப காலங்களில் கோஹ்லியின் துடுப்பாட்டத்தை  பார்த்த பிறகு சச்சினின் சாதனையை அவர் நெருங்கினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தோன்றுகிறது என்றும் கபில்தேவ் கூறியுள்ளார். 

TOTAL VIEWS : 188
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
b9qne
  PLEASE ENTER CAPTA VALUE.