டயலொக் சம்பியன் லீக் கால்பந்தாட்டம்; சீரற்ற காலநிலையால் 5 போட்டிகள் ஒத்திவைப்பு
2017-09-12 12:00:59 | General

டயலொக் வெற்றிக்கிண்ணத்துக்கான சம்பியன் லீக் கால்பந்தாட்டத் தொடரின் கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவிருந்த 5 போட்டிகள் சீரற்ற காலநிலைகாரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


2 ஆம் கட்ட போட்டிகளான இவை கொழும்பு, களனி மற்றும் மாத்தறைப் பகுதியில் நடைபெறவுள்ளன.

இதில் சனிக்கிழமை சீரற்ற காலநிலை காரணமாக 3 போட்டிகளும் ஞாயிற்றுக்கிழமை இதே காரணத்தால் 2 போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட மேற்படி 5 போட்டிகளும் நாளை 13 ஆம் திகதி புதன்கிழமை ஏற்கனவே திட்டமிட்ட மைதானங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்தச் சுற்றுப் போட்டியில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியொன்றில் யாவாலேன் விளையாட்டுக் கழகம் 30 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று 3 புள்ளிகளை பெற்றுள்ளது. 
இந்தப் போட்டி பொலிஸ் பார்க் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 

TOTAL VIEWS : 228
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
auf4e
  PLEASE ENTER CAPTA VALUE.