இங்கிலாந்து, ஜேர்மனி வெற்றி
2017-03-27 15:32:59 | General

உலகக் கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றில் இங்கிலாந்து நடப்புச் சம்பியன் ஜேர்மனி உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றன.


ரஷ்யாவில் அடுத்த ஆண்டு (ஜுன் 14   ஜூலை 15) 21 ஆவது “பிபா' உலகக் கிண்ண கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கின்றன.


லண்டனில் நடந்த ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச் சுற்றின் எப் பிரிவில் இங்கிலாந்து, லிதுவேனியா  அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் டெபோ (21 ஆவது நிமிடம்), வார்டி (66 ஆவது ) தலா ஒரு கோல் அடித்தனர்.


இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி, ஒரு “டிரா' என 13 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி எப் பிரிவில் முன்னிலை வகிக்கிறது.


ஜேர்மனி அசத்தல் அஸர்பைஜானில் நடந்த ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச் சுற்றின் சி பிரிவில் அஸர்பைஜான் நடப்பு சம்பியன் ஜேர்மனி அணிகள் மோதின.

இதில் அசத்தலாக ஆடிய ஜேர்மனி அணி 41 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஜேர்மனி சார்பில் அன்ட்ரி சுருள் (19, 81 ஆவது நிமிடம்), தோமஸ் முல்லர் (36 ஆவது), கோமஸ் (45 ஆவது) கோல் அடித்தனர்.

அஸர்பைஜான் அணிக்கு நஜரோவ் (31 ஆவது நிமிடம்) ஆறுதல் தந்தார். இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் ஜேர்மனி அணி சி. பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது. 

TOTAL VIEWS : 639
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
5xohr
  PLEASE ENTER CAPTA VALUE.